96- திரைவிமர்சனம்

0
2211
96
- Advertisement -

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “96” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ் தயாரித்துள்ள இந்த படம் ஒரு ரொமான்டிக் காதல் கதையாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காண்போம்.

-விளம்பரம்-

vijay sethubathi

- Advertisement -

படம்:- 96
இயக்குனர்:- பிரேம் குமார்
நடிகர்கள்:- விஜய் சேதுபதி, த்ரிஷா, ஆதித்யா பாஸ்கர், ஜனகராஜ், கௌரி,தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள்
இசையமைப்பளார் :- கோவிந்த் மேனன்
தயாரிப்பு:- மெட்ராஸ் என்டர்ப்ரைசஸ்
வெளியான தேதி:- 04-10-18

கதைக்களம்:

-விளம்பரம்-

முதலில் இந்த படத்தை ரசிகர்களுக்கு அளித்தமைக்கு இயக்குனர் ராம் குமாருக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டுக்கள். இந்த படம் “ஆட்டோகிராப், பிரேமம்” படங்களை போன்று பள்ளி பருவ காதலின் ஒரு நினைவூட்டல் என்றாலும் இந்த படத்தில் வரும் ராம் (விஜய்சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (திரிஷா) என்ற கதாபாத்திரத்தை அணுவணுவாக செதுக்கியுள்ளார் இயக்குனர் பிரேம்.

படத்தின் ஆரம்பத்தில் விஜய் சேதுபதி அறிமுகமாகும் காட்சி தொடங்கியயுடன் நம்மை கதைக்குள் கூட்டி செல்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பத்தில் “ராம்” என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் காட்சியிலேயே இந்த படத்தில் காட்சிகள் மற்றும் இசை மீது நமக்கு நம்பிக்கை ஏற்ப்பட்டு விடுகிறது.

96

படத்தின் ஹீரோ ஒரு புகைப்பட கலைஞர், அவர் 22 வருடங்கள் கழித்து தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அப்போது அவர் விளையாடிய இடம்,பேருந்து நிலையம், மருத்துவமனை, படித்த பள்ளி என்று அனைத்தையும் பார்த்து மனதிற்குக்குள் ஒரு நினைவூட்டளை மிதக்கவிடுகிறார். பின்னர் தான் பள்ளி பருவத்தில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது காதலித்த ஜானகி தேவியை (திரிஷா) நினைவு படுத்துகிறார். பின்னர் தனது பழைய பள்ளி பருவ நண்பர் மூலம் அணைத்து பள்ளி நண்பர்களுக்கும் தகவல் அனுப்பி ஒரு கெட் டு கெதரை ஏற்பாடு செய்கின்றனர்.அந்த நிகழ்ச்சியின் போது தான் 22 ஆண்டுகளுக்கு பின்னர் தான் காதலித்த தனது காதலியை பார்க்கிறார் ராம் (விஜய் சேதுபதி)

ஜானகி தேவியாக வரும் நடிகை த்ரிஷாவின் என்ட்ரி அனைவரது கண்களையும் கவர தங்களது பள்ளி பருவ நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்கின்றனர். பின்னர் ராம் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (த்ரிஷாவின்) ஆகியோரின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி நடிக்கும் காட்சிகள் ரசிகர்களின் பள்ளி பருவ காதலை கண் முன்னே நிறுத்தும். கடைசியில் (விஜய் சேதுபதி) மற்றும் ஜானகி தேவி (த்ரிஷாவின்) காதல் என்னவானது, 22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் காதலர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்பது தான் கதை.

ப்ளஸ்:

இந்த படத்தின் ப்ளஸ்களை கூறிக்கொண்டே போகலாம். படத்தின் இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை இயக்கம் என்று அனைத்தும் குறைகூற முடியாத அளவிற்கு உள்ளது. விஜய் சேதுபதி அறிமுகம் ஆகும் கட்சியும் சரி, த்ரிஷா சாதாரண ஒரு காட்டன் சுடிதாரில் அறிமுகமாகும் காட்சியும் சரி நமது கண்களில் நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறது. படத்தின் இசை நமது காதுகளில் அல்ல உள்ளத்தில் ஓசையாக ஒலிக்கிறது. அதிலும் “காதலே காதலே ” பாடல் இடம்பெறும் காட்சியாகட்டும் மற்ற பாடல்கள் இடம்பெறும் காட்சியாகட்டும் ரசிகர்களின் எண்ணத்தை வருடுகிறது. மஹிந்திரன் மற்றும் ஷண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக இருக்கிறது.

96-movie
96-movie

மைனஸ்:
சொல்லிக்கொள்ளும்படி ஒன்றும் இல்லை

இந்த படம் விஜய் சேதுபதிக்கு சரி நடிக்க த்ரிஷாவிற்கும் சரி வாழ்வில் மறக்க முடியாத படமாக தான் இருக்கும். எப்படி “விண்ணை தாண்டி வருவாயா” படத்தில் த்ரிஷா நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் இன்றளவும் பேசப்படுகிறதோ அதே போல இந்த படத்தில் அவர் நடித்துள்ள ஜானகி தேவி அலைஸ் ஜானு கதாபத்திரமும் மறக்க முடியாது. மொத்தத்தில் இந்த படத்திற்கு Behind Talkies-ன் மதிப்பு 8/10

Advertisement