விஜய் டெலிவிஷன் அவார்ட் 2024 ஆம் ஆண்டிற்கான விழாவில் விருது வாங்கியிருக்கும் தொடர்களின் பட்டியல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சில காலமாக மக்களின் பேவரைட் சேனலாக விஜய் டிவி திகழ்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அதனாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலரும் விரும்பி பார்க்கும் சேனலாக விஜய் டிவி உள்ளது.

அதுமட்டும் இல்லாமல் வெள்ளித்திரைக்கு பல நடிகர்கள் விஜய் டிவியில் இருந்து தான் ஏற்றுமதி செய்கிறார்கள். அந்த அளவிற்கு பல கலைஞர்களை உருவாக்கி இருக்கிறது. மேலும், வருடம் வருடம் விஜய் டிவியில் பல புதுமையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. அதில் ஒரு சில நிகழ்ச்சி ரசிகர்களை கவர தவறவிட்டாலும் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் ஒரு நிகழ்ச்சி தான் விஜய் அவார்ட்ஸ்.
விஜய் டிவி விருது விழா:
ஆண்டு தோறும் விஜய் டிவியில் நடந்து வரும் விருது விழா கலைத்துறையில் சாதித்த சிறந்த நடிகர்கள் , நடிகைகள், இசையமைப்பாளர்கள் என்று பல துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டும், சினிமா துறை கலைஞர்களை கெளரவித்தும் வருகிறது. அதேபோல் விஜய் டிவியில் பணியாற்றி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் விஜய் டெலிவிஷன் விருதுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து வரும் நடிகர், நடிகைகள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் என்று பலருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டெலிவிஷன் விருது விழா:
கடந்த ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விழா கூட சிறப்பாக நடந்து இருந்தது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான விஜய் டெலிவிஷன் விருது வழங்கும் விழா குறித்து தான் கடந்த சில வாரங்களாகவே இணையத்தில் பேசப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் 9-வது விஜய் டெலிவிஷன் விருதுகள் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இதில் யார் யாருக்கு? என்னென்ன விருதுகள் வாங்கி இருக்கிறார்கள்? என்பதை பற்றிய பட்டியல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. இதில் அதிகம் சிறகடிக்க ஆசை சீரியல் வாங்கி இருக்கிறது .

விருது பட்டியல்:
சிறந்த பாட்டி- ரேவதி (சிறகடிக்க ஆசை)
சிறந்த தாத்தா- ரோசரி (பாக்கியலட்சுமி)
சிறந்த மாமனார்- சுந்தர்ராஜன் (சிறகடிக்க ஆசை)
சிறந்த மாமியார்- அனிலா ஸ்ரீகுமார் (சிறகடிக்க ஆசை)
சிறந்த அம்மா- நிரோஷா (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
சிறந்த குடும்பம்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
சிறந்த நடிகை- கோமதி ப்ரியா (சிறகடிக்க ஆசை)
சிறந்த நடிகர்- வெற்றி வசந்த் (சிறகடிக்க ஆசை)
சிறந்த Budding Pair- பிரேம், வர்ஷினி (நீ நான் காதல்)
சிறந்த அப்பா- ஸ்டாலின் முத்து (பாண்டியன் ஸ்டோர்ஸ்)
Best Find Of The Year- நவின் (சின்ன மருமகள்)
Supporting Actor, Actress- ஸ்ரீதேவா, சல்மா (சிறகடிக்க ஆசை)
சிறந்த மருமகள்- அக்ஷயா (ஆஹா கல்யாணம்)
ஸ்பெஷல் விருது- தீபக்
சிறந்த சீரியல்- சிறகடிக்க ஆசை
Child Artist- வேதா ஸ்ரீ (பொன்னி)
சிறந்த வில்லன்- நவீன் முரளிதரன் (நீ நான் காதல்)
சிறந்த தொகுப்பாளர்- பிரியங்கா தேஷ்பாண்டே
Entertainer Of The Year- மாகாபா
சிறந்த தொகுப்பாளர்- ரியோ ராஜ்
சிறந்த இயக்குனர்- செல்லம்மா (Non Prime Time)
ஸ்பெஷல் விருது- பாக்கியலட்சுமி (1000 எபிசோட்)
பேரவெட் ரியாலிட்டி ஷோ- சூப்பர் சிங்கர் ஜுனியர் 9
காமெடி ஷோ- அது இது எது
பேவரெட் கேம் ஷோ- ஸ்டார்ட் மியூசிக்
Trending Pair Non Fiction- பாலா, நிஷா
சிறந்த எழுத்தாளர்- ப்ரியா தம்பி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி
சிறந்த ஜோடி- ஸ்வாதிநாதன், லட்சுமி ப்ரியா (மகாநதி)






