-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

வெளிநாட்டில் ஒரு ஷோல இருந்தோம் அதுனால கேப்டன் இறப்புக்கு வரமுடியல – கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி

0
284

கடந்த வாரம் சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே விஜயகாந்தின் இறப்பு குறித்த செய்தி தான். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல் நல குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் விலகி சிகிச்சை பெற்று இருந்தார். கடந்த மாதம் விஜய்காந்த் அவர்களுக்கு இருமல், சளி அதிகமாக இருந்ததால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருந்தது. இதனால் இவரை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவர் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்த் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். மேலும், விஜயகாந்தின் இறப்பு ஒட்டு மொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பாடகர் செந்தில்- ராஜலட்சுமி செலுத்திய அஞ்சலி:

இந்த நிலையில் பாடகர் செந்தில்- ராஜலட்சுமி அவர்கள் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி இருக்கிறார்கள். அதற்குப்பின் பேட்டியில் செந்தில், கேப்டன் மறைந்த அன்று நாங்கள் வெளிநாட்டில் கச்சேரியில் இருந்தோம். அதனால் வர முடியவில்லை. அதற்குப் பின் அவருடைய நினைவிடத்திற்கு வந்து அவரிடம் ஆசிர்வாதம் வாங்க வந்தோம். நான் சிறு வயதில் இருந்தே கேப்டனை பார்த்திருக்கிறேன். பார்த்து வளர்ந்தேன்.

பாடகர் செந்தில்- ராஜலட்சுமி பேட்டி:

-விளம்பரம்-

ஒரு தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று காண்பித்தவர். என்னுடைய முதல் ஓட்டை கேப்டனுக்காக தான் போட்டேன். அவர் அரசியலில் சாதிப்பார் என்று பார்த்தோம். உடல்நிலை சரியில்லாமல் சில வருடங்கள் அவஸ்தை பட்டு இருந்தார். குணமாகி வந்துவிடுவார் என்று நாங்கள் ரொம்ப எதிர்பார்த்தோம். ஆனால், கேப்டன் நம்மை விட்டு பிரிந்தது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மேலும், கடையெழு வள்ளல்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.

-விளம்பரம்-

கேப்டன் செய்த உதவி:

அவர்களை பார்த்தோமா என்று தெரியாது. ஆனால், கேப்டனை பார்த்திருக்கிறோம். அவருடைய கொடை எல்லோருக்கும் தெரிந்ததே. இதற்கு பிறகு இப்படி ஒரு மனிதனை பார்ப்போமா? என்று தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தது என்று சொல்லும்போது பெருமையாக இருக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையனும் என்று வேண்டிக்கொள்கிறேன். கேப்டனை பார்க்க வேண்டும் என்ற காலகட்டத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

கேப்டன் மறைவு குறித்து சொன்னது:

அதனால் அவரை பார்க்க முடியவில்லை. ஆனால், அவருடைய மாநாடுகளில் எல்லாம் நாங்கள் நிகழ்ச்சி செய்து இருக்கிறோம். கேப்டனை பார்க்க முடியவில்லை என்றாலும் அவருடைய மனைவி பிரேமலதா அம்மாவை பார்த்து கேப்டனை பற்றி நலம் விசாரித்து தான் இருந்தோம். அவர் திரும்பி வந்துவிடுவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அவர் இறப்பு பலருக்கும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது. துரதிஷ்டமாக அவர் இறந்தது கஷ்டமாக இருக்கிறது. இந்த தருணத்தில் நாங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news