நிமிர்ந்து நில், கொடி போன்ற படங்களில் நடித்த நடிகர் திடீர் மரணம் – காரணம் இதுதான்.

0
1323
anil
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு மக்களுக்கு ஒரு கருப்பு ஆண்டாகவே இருந்து வருகிறது. அதிலும் சினிமா துறையில் சமீபகாலமாக பல்வேறு நபர்களின் இழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள மற்றும் தமிழ் நடிகரான அணில் முரளி சமீபத்தில் காலமாகி உள்ள சம்பவம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழில் இவர் பிரபலமில்லை என்றாலும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

மலையாளத்தில் பிரபல நடிகரான இவர் கடந்த 1993- ஆம் ஆண்டு வினயன் இயக்கத்தில் வெளியான ‘கன்னியாகுமரியில் ஒரு கவிதா’ என்ற படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அனில் முரளி. அதற்குப் பிறகு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பல முன்னணி நாயகர்களின் படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும், இவர் தமிழில் அறிமுகமானது ஷாம் நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘6’ என்ற படத்தின் மூலம் தான். அதை தொடர்ந்து நிமிர்ந்து நில், தனி ஒருவன், அப்பா, கொடி, தொண்டன், மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட தமிழ்ப் படங்கள் ஒரு சில தெலுங்கு மொழிப் படங்கள் என 200-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.முரளிக்குக் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது.

இதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். அப்போது உடல்நிலை மோசமானதால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று (ஜூலை 30) காலையில் உயிரிழந்தார். இவருக்கு சுமா என்ற மனைவியும் ஆதித்யா என்ற மகனும் அருந்ததி என்ற மகளும் இருக்கிறார்கள். நடிகர் முரளியின் இழப்பிற்கு பல்வேறு மலையாள நடிகர்கள் தமிழ் நடிகர்களும் சமூகவலைதளத்தில் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். கொரோனா பிரச்சினை காரணமாக இவரது இறுதி சடங்கில் முக்கிய நபர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement