வித்யாவிற்கு பதிலாக நட்சத்திரா வந்தது ஏன் ? கொரோனா பயத்தால் விலகினாரா வித்யா. அவரே அளித்த விளக்கம்.

0
4011
nayagi
- Advertisement -

சமீப காலமாகவே மக்கள் வெள்ளித்திரைக்கு சென்று படங்களைப் பார்ப்பவதை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களை தான் அதிகம் பார்த்து வருகிறார்கள். தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் தொடர்களை பார்த்து வருகிறார்கள். அதிலும் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்புகின்றனர். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக நடை போட்டுக்கொண்டிருக்கும் தொடர் தான் நாயகி. இந்த தொடரின் ஆரம்பத்தில் பிரபல நடிகை விஜயலட்சுமி நடித்திருந்தார்.

-விளம்பரம்-
Vidya Pradeep Wiki,Bio,Movies,Age,Serials, Photos,Gallery | Studymeter

தற்போது நடிகை வித்யா நடித்து வந்தார். இந்நிலையில் இந்த சீரியலில் பல மாற்றங்கள் கொண்டு வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் சின்ன திரை முதல் வெள்ளிதிரை வரை என அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசின் சில அறிவுரைகளின் படப்பிடிப்புகள்தொடங்கப்பட்டு புதிய எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது .

- Advertisement -

அந்த வகையில் தற்போது நாயகி சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாக துவங்கியது . ஆனால், முன்பு இருந்த ஜோடிக்கு பதிலாக சன் டிவியின் மிக பிரபலமான தொடரான ‘தெய்வமகள்’ சீரியலில் ஹீரோவாக நடித்த கிருஷ்ணாவும் லட்சுமி ஸ்டோர்ஸ் நடிகை நட்சத்திராவும் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இதனால் வித்யா இந்த தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்டது.

View this post on Instagram

False Information Alert!

A post shared by Vidya Pradeep (@vidya.pradeep01) on

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார் வித்யா, அதில், நண்பர்களே கொரோனா பயத்தினால் நான் நாயகி தொடரில் இருந்து விலகவில்லை. எங்களின் பகுதிகள் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது .இது குறித்து நான் கடந்த மாதமே அறிவித்திருந்தேன். தற்போது திடீரென்று நான் ஏன் இந்த சீரியலில் இருந்து விலகினேன் என்று கேள்விகளை கேட்டு வருகிறார்கள். நான் மிகவும் தொழில் தர்மம் உடையவள் இது போல நான் பாதியில் ஒரு பிராஜாக்டிலிருந்து விலக மாட்டேன்

-விளம்பரம்-

Advertisement