செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது செய்தி வாசிப்பதை விட்டுவிட்டு சினிமாவில் படு பிசி. அதே போல பிரபல செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘2.0’, ‘தளபதி’ விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘காப்பான்’ போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்போது நடிகையாக ‘மாஸ்டர்’ என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டும் கைவசம் வைத்திருக்கிறார் அனிதா சம்பத்.
பிரியா பவானி சங்கர், அனிதா சம்பத் எப்படி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அவதாரம்எடுத்தார்களோ, அதே போல் இன்னொரு பிரபல செய்தி வாசிப்பாளரும் அந்த ரூட்டில் பயணிக்க துவங்கிவிட்டார் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி.பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த திவ்யா துரைசாமிக்கு, அவங்க ஸ்கூல் படித்து கொண்டிருந்த டைம்லையே டான்ஸ் ஆடுவது தான் ரொம்ப பிடிக்குமாம்.
இதையும் பாருங்க : நிமிர்ந்து நில், கொடி போன்ற படங்களில் நடித்த நடிகர் திடீர் மரணம் – காரணம் இதுதான்.
படித்து கொண்டிருந்த போது மீடியா துறையில் என்ட்ரியாவோம் என்று நினைத்துக் கூட பார்க்காத திவ்யா துரைசாமி, படித்து முடித்ததும் ஒரு முன்னணி நியூஸ் சேனல்களில் ஒன்றான ‘சன் நியூஸ்’ சேனலில் செய்தி வாசிப்பாளர் ஆக நுழைந்து தனது மீடியா பயணத்தை துவங்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் ம க விற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தற்போது சுசந்திரன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படத்தில் லீட் ரோலில் கமிட் ஆகி இருக்கிறார். ஜெய் ஹீரோவாக நடிக்கும் ஸ்ம்ருதி வெங்கட்,பாரதிராஜா, பாலா சரவணன் காலி வெங்கட் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். கொரோனா சமயத்தில் கிராமப்பகுதியில் நடக்கும் சில சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாக்கப்படுகிறதாம்.