சமந்தாவின் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலின் நடன இயக்குனர் மீது பாலியல் வழக்கு – அதிர்ச்சியில் திரையுலகம்

0
484
pushpa
- Advertisement -

சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு நடனம் சொல்லித் தந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சர்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய திரை உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சமீப காலமாக இவரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனிடையே நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்திருந்தார்.

-விளம்பரம்-
samantha

பின் இவர்கள் இருவரும் பரஸ்பரமாக பிரிய இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள். இது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. விவகாரத்துக்கு பின்னர் நடிகை சமந்தா தடையில்லாமல் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் சமந்தா ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் முதன் முறையாக ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடல்:

புஸ்பா படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து இருந்தனர். மேலும், பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கிறார். அதிலும் இந்த படத்தில் இடம்பெற்ற ‘வாயா சாமி ‘ பாடலை விட சமந்தா ஆடிய ‘ஊ சொல்றியா’ பாடல் தான் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த ஒரு பாடலில் ஆட நடிகை சமந்தாவிற்கு 1.30 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாலுக்கு எழுந்த சர்ச்சை:

மேலும், திரையரங்கில் இந்த பாடலை ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு இருந்தார்கள். இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் இந்த பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இப்படி எந்த அளவிற்கு இந்த பாடல் வரவேற்பை பெற்றதோ அதே அளவு இந்த பாடல் பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் ஆந்திராவை சேர்ந்த ஆண்களுக்கான அமைப்பு ஒன்று புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்து இருந்தது அனைவருக்கும் தெரிந்ததே.

-விளம்பரம்-

கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் வழக்கு:

இருந்தாலும் சமந்தாவின் ‘ஊ சொல்றியா’ பாடல் படு பேமஸ் ஆனது. மேலும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்தவர் கணேஷ் ஆச்சார்யா. இந்நிலையில் சமந்தாவின் ஊ சொல்றியா பாடலுக்கு நடனம் சொல்லித் தந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீது பாலியல் வழக்கு பதிவு செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடன இயக்குனராக திகழ்பவர் கணேஷ் ஆச்சார்யா. இவர் பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணி புரிந்து இருக்கிறார். மேலும், இவர் நடன இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். சில படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

கணேஷ் ஆச்சார்யா மீது தொடர்ந்த வழக்குக்கு காரணம்:

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மற்றும் அவருடைய உதவியாளர் ஆகிய இருவரும் அவரது நடன குழுவில் இருந்த பெண் ஒருவரிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்த தகவல் வெளியாகி உள்ளது. ஆகவே நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாமற்றும் அவரது உதவியாளர் மீது 354-ஏ, 354-சி, 354-டி, 509, 323, மற்றும் 504 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து இது குறித்து கணேஷ் ஆச்சார்யாவிடம் கேட்டபோது, அவர் தன் மீது உள்ள அனைத்து குற்றங்களையும் மறுத்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பதாகவும் கூறியிருக்கிறார்.

Advertisement