ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி அவதூறாக பேசியிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ஸ்ரீரெட்டி.
பின் இவர் பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார். தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை சாட்டி இருந்தார். மேலும், அதற்காக ‘ரெட்டி லீக்ஸ்’ என்ற போராட்டம் ஒன்றையும் துவக்கி இருந்தார்.
ஸ்ரீரெட்டி குறித்த சர்ச்சை:
அதுமட்டுமில்லாமல் இந்தப் போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை பல ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து இருந்தார்கள். இந்த நடவடிக்கையால் ஆந்திராவில் நடிகை ஸ்ரீரெட்டிக்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து ஸ்ரீரெட்டி சென்னையில் குடியேறினார். அதன் பிறகு இவர் தமிழ்நாட்டையும் விட்டு வைக்கவில்லை. தமிழ் சினிமாவிலும் தன்னை படுகைக்கு அழைத்ததாக இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் பெயரை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியிருந்தார்.
ஸ்ரீரெட்டி லீக்ஸ்:
அப்போது தெலுங்கு சினிமா பக்கம் தலை வைத்து படுக்க முடியாது என்ற நிலையிலும் தெலுங்கு சினிமா பற்றி அடிக்கடி ஏதாவது பதிவிட்டு வருகிறார் ஸ்ரீரெட்டி, அந்த வகையில் பவன் கல்யாணுக்கு எதிராக பல சர்ச்சை கருத்துக்களை கூறி வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கடுமையாக கண்டித்தும் விமர்சித்தும் இருந்தார்கள். மேலும், நடந்து முடிந்த தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி பெற்றால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று நடிகர் ஸ்ரீ ரெட்டி சொன்னதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வந்திருந்தது.
ஜெகன் மோகனை தொடர்ந்து சந்திர பாபு நாயுடு:
அதற்கு ஏற்ப தேர்தலில் ஜெகன்மோகன் கட்சி தோல்வி அடைந்தது. அதனால் சோசியல் மீடியாவில் ஸ்ரீரெட்டியை அனைவரும் வருத்தெடுத்தனர். தற்போது மீண்டும் ஸ்ரீ ரெட்டி தனது சமூக வலைதள பக்கமான பேஸ்புக்கில் தொடர்ச்சியாக தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் பதவி ஏற்றுள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா, சந்திரபாபு நாயுடுவின் மகன் நர.லோகேஷ் ஆகியோர் குறித்து இவர் வீடியோ மூலம் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு இருந்தார்.
ஸ்ரீரெட்டி மீது பாய்ந்த வழக்குகள்:
இந்நிலையில் கர்னூலைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி நாகராஜு, தெலுகு தேசம் கட்சித் தலைவர்கள் மீது ஸ்ரீரெட்டி அவதூறு பரப்பி வருவதாக, கடந்த ஜூலை 20ஆம் தேதி புகார் அளித்தார். அதன் பேரில் ஸ்ரீரெட்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கூடிய விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.