மிரட்டல் பட கதையை சொன்னதும் அஜித் இதை தான் சொன்னார். முருகதாஸ் சொன்ன ஸ்வாரசியம்.

0
44905
mirattal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக் கதையாசிரியர், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார். 2001 ஆம் ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த “தீனா” படத்தின் மூலம் தான் தான் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரமணா, கஜினி, துப்பாக்கி, ஏழாம் அறிவு, கத்தி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். தற்போது கூட ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் “தர்பார்” படத்தை இயக்கி உள்ளார்.

-விளம்பரம்-
Related image

- Advertisement -

தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்து உள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ஸ்ரீமன், ஸ்ரேயா சரண், பிரதீப் பப்பர், சுனில் ஷெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இந்த படத்தில் ‘ஆதித்யா அருணாசலம்’ என்ற பெயரில் ரஜினிகாந்த் அவர்கள் நடித்து உள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். மேலும், இந்த படம் வருகிற ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரப்போகிறது. இந்நிலையில் தற்போது தர்பார் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் அஜித் பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியது, தல அஜித்தை வைத்து இயக்கிய தீனா படத்தை தொடர்ந்து மிரட்டல் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். தல அஜித் இடம் சொல்லும்போது அவர் சுவாரசியமாக கேட்டதும் முதலில் படத்திற்காக நான் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்கிறேன். கதை சூப்பராக உள்ளது என்று அவர் சொன்னார். அதுவரை எனக்கு சிக்ஸ் பேக் வைக்கும் ஐடியாவே இல்லை. அவர் சொல்லும் போது தான் எனக்கும் சிக்ஸ் பேக் ஐடியா வந்தது. பின்னர் தயாரிப்பாளருக்கும், அஜித்துக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக மிரட்டல் படம் அப்படியே நின்று விட்டது. அதுமட்டும் இல்லாமல் படத்திற்கு மிரட்டல் என்று பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியானது. இவர்களிடையே இருந்த பிரச்சனையினால் படம் அப்படியே நின்றது. பின்னர் நடிகர் சூர்யாவை வைத்து “கஜினி” என்ற பெயரில் படத்தை எடுத்தேன். இந்த படத்தில் அஜித் சொன்ன ஐடியாவை வைத்து தான் சூர்யாவிற்கு சிக்ஸ் பேக் வைக்க சொன்னோம்.

-விளம்பரம்-
Image result for Mirattal

பின்னர் ஹிந்தியிலும் இந்த படத்தை அமீர்கான் வைத்து இயக்கினேன். இந்த படத்திலும் அமீர்கான் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என்று கூறியிருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையவில்லை. மீண்டும் இவர்கள் இணைவார்கள் என ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளார்கள். தல அஜித்தும், விசுவாசம், நேர்க்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது வலிமை என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டு வருகிறார். இந்த வலிமை படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. அதுமட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் எனவும் அறிவித்தார்கள். இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார். வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

Advertisement