ஆஸ்கார் நாயகனை தெரியாதவர்கள் யாராவது இருப்பார்களா!!!! இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். இதனாலே இவரை அனைவரும் இசைப்புயல் என்று அழைக்க ஆரம்பித்தார்கள். இவர் தன்னுடைய இசை திறமைக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார். இவருடைய இசைக்கும், பாடலுக்கும் மயங்காத ஆட்கள் இருக்க மாட்டார்கள். இவருக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவில் ரசிகர்கள் உள்ளார்கள்.

இவருடைய இசை திறமையை தேசிய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் நிரூபித்தவர். பொதுவாகவே ஏ. ஆர். ரகுமான் சினிமா வாழ்க்கையை பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல பேருக்கு தெரியாது. மேலும், ஏ. ஆர். ரகுமான் அவர்கள் தொழில் முறை, வாழ்க்கை முறை என அனைத்திலும் பாராட்டத்தக்க அளவில் வெற்றி கொண்டவர். இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். குறிப்பிட்ட பருவம் வந்தாலே பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்வது வழக்கமான ஒன்று. அதில் ஏ ஆர் ரகுமான் மட்டும் என்ன விதி விலக்கா? எல்லா பெற்றோர்களை போல ஏ.ஆர் ரகுமான் அம்மாவும் ஏ. ஆர். ரகுமானுக்கு பெண் தேட ஆரம்பித்தார்.

Advertisement

உடனே ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனக்கு வரப்போகிற பெண் எப்படியிருக்க வேண்டும் என்று மூன்று கண்டிசன்களை வைத்தார். அது என்னவென்றால், முதலில் அந்த பெண் நன்றாக படித்திருக்க வேண்டும். அதோடு இசை அறிவு கொஞ்சமாவது இருக்க வேண்டும். இரண்டாவது அந்த பெண் அழகாக இருக்க வேண்டும். மூன்றாவது கண்டிஷன் தான் ரொம்ப முக்கியம் அந்த பெண் அனைவரையும் மதிக்கக் கூடிய மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று கூறினார். அவர் கூறிய முதல் இரண்டு கண்டிஷன்கள் கொண்ட பெண்கள் கிடைத்து விடும். ஆனால், மூன்றாவது கண்டிஷன் உள்ள பெண் கிடைக்க தான் கொஞ்சம் கடினமாக இருந்தது. இதையெல்லாம் தாண்டி ஏ ஆர் ரகுமான் அவர்கள் அம்மா அலைந்து திரிந்து ஒரு பெண்ணை பார்த்தார்.

அந்தப் பெண்ணின் பெயர் சாய்ரா . அந்த பெண் நடிகர் ரஹ்மானின் மனைவி மெஹரரின் மூத்த சகோதரி ஆகும். நடிகர் ரஹ்மான் மெஹரை சந்திக்கும் போது தான் மூத்த சகோதரி சாய்ரா இருப்பதை நடிகர் அறிந்து கொண்டார். முதலில் சாய்ரா திருமணம் செய்து கொண்டால் தான் மொஹருக்கு திருமணம் செய்ய முடியும் என்று அவர்களுடைய அப்பா தெரிவித்தார். ஆனால், அவருக்கும் நடிகர் ரஹ்மானை பிடித்து போக அக்காவின் திருமணத்திற்கு முன்பாகவே தங்கையின் திருமணம் நடைபெற்றுள்ளது.

Advertisement

பின்னர் தான் சாய்ரா மற்றும் ரஹ்மான் இருவருக்கும் 1995 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. ஏ.ஆர் ரகுமான் ஆசைப்பட்ட மாதிரியே அவருடைய மனைவி சாய்ராவும் அமைந்தார். ரஹ்மானுக்கு திருமணம் ஆகும்போது 27 வயதும், சாய்ராவுக்கு 21 வயதும் இருந்தது. திருமணத்திற்கு பிறகு இவர்கள் இவருடைய புரிதலும் நன்றாக இருந்தது. தற்போது இவர்களுக்கு அழகான மூன்று குழந்தைகள் உள்ளன . இரு மகள்கள், ஒரு மகன்.

Advertisement
Advertisement