இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான் இந்திய சினிமாவில் அசைக்கமுடியாத இசையமைப்பாளா்.இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க தனக்கென ஒரு ரசிகா் கூட்டத்தை வைத்திருப்பவா்.மேற்கித்திய இசையை நம்நாட்டினா் கேட்டுக்கொண்டிருந்ததை மாற்றி தன் திறமையால் நம் நாட்டின் இசையை உலகம் முழுக்க பரவச் செய்தவா்.

கடந்த இருப்பைந்து ஆண்டுகளாக உலகையே தன் இசை ராஜ்ஜியத்தால் கட்டிபோட்டிருப்பவா் “இசைப்புயல் ஏ.ஆா்.ரகுமான்”. 2008ம் ஆண்டு வெளியான “ஸ்லம்டாக் மில்லியனா்” திரைப்படம் இவருக்கு ஆஸ்கா் விருதை பெற்றுதந்தது.ஆஸ்கா் விருது வாங்கியவுடன் ரகுமான் உதிா்த்த வாா்த்தைகள் “எல்லாப் புகழும் இறைவணுக்கே”.

இதையும் படியுங்க : டைட்டானிக்கின் 10 வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்.! அவதார் சாதனையை நெருங்குகிறது.! 

Advertisement

ஹாலிவுட்டிலும் சில படங்களுக்கு இசையமைத்து அங்கும் தனது வெற்றக்கொடியை நாட்டினாா். கோல்டன் குளோப் விருது,பத்மபூசன் விருது,கௌரவ டாக்டா் பட்டம்,கிராமிய விருது என அனைத்து விருதுகளையும் இவா் பெற்றுள்ளாா். சமீபத்தில் இவருக்கு கனடா நாடு குடியுரிமை வழங்க முன்வந்தது. ஆனால், அதனை ஏற்க மறுத்துள்ளார் இசை புயல்.

இதுகுறித்து பேசியுள்ள ரஹ்மான், கனடா குடியுரிமை கொடுக்க முன்வந்த மேயருக்கு எனது நன்றி, தமிழ்நாட்டில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன், இந்தியா தான் எனது நாடு, என் மக்கள் மற்றும் நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள் என்று கூறி அணைத்து இந்தியர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஏற்கனவே இந்தி நடிகர் அக்சய் குமாருக்கு கனடா நாட்டு குடியுரிமை வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement