டைட்டானிக்கின் 10 வருட சாதனையை முறியடித்த அவெஞ்சர்ஸ்.! அவதார் சாதனையை நெருங்குகிறது.!

0
501
Avengers-Avatar

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது.

Image result for avengers endgame

உலகளவில் வெளியாகியுள்ள இந்த படம் இந்திய ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்த படம் பல மில்லியன்களை வசூலிக்கும் என்றும், இந்தியாவில் மட்டும் இந்த படம் 350 கோடிகளை வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது. மேலும், விரைவில் அவதார் திரைப்படத்தின் சாதனையையும் முறியடித்து விடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

- Advertisement -

தற்போது உலகம் முழுவதும் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டி வசூல் செய்துள்ளதாகவும் மேலும் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. உலகளவில் அதிகம் வசுலித்த படங்களில் இரண்டாவது இடத்திலிருந்த டைட்டானிக் படத்தின் வசூல் சாதனை இப்படம் முறியடித்துள்ளது. 

முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 45 கோடிகளை வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 169 பில்லியன் அதாவது இந்திய ரூபாயின் மதிப்புபடி 1,186 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதுவரை வந்த அவெஞ்சர்ஸ் சீரியஸ் படங்களிலேயே இந்த படம் தான் அதிக வசூலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement