முருகதாஸுக்கு நோ சொன்ன ரஹ்மான்…!ரஜினி 166 படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா..!

0
303
murugadoss

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார். ரஜினியின் 166 படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார் என்று நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த படத்தில் இசையமைக்க முதன் முதலில் ஏ ஆர் ரகுமானை கமிட் செய்ய தான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அவர் நோ சொல்லவே தற்போது ரஜினியின் பேட்ட படத்தில் இசையமைத்து வரும்  அனிருத்தையே பரிந்துரை செய்துள்ளார் ரஜினி.

தற்போது பேட்ட படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி படு ஹிட் ஆன நிலையில் ரஜினி சொன்னதை கேட்டு அனிருத்தையே கமிட் செய்துள்ளாராம் முருகதாஸ். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும்,சமீபத்தில் வந்த தகவலின்படி விக்னேஷ் சிவன் படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகியுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கும் என்றும் நம்பகரமான தகவலும் வெளியாகியுள்ளது.