ஹோட்டலில் பார்த்தவரை திருமணம் செய்து கொண்ட ரஹ்மான். இவருக்கு இவ்வளவு பெரிய மகள்கள் இருக்கிறார்களா.

0
113396
rahman
- Advertisement -

தமிழ்சினிமாவில் ஒருசில நைட்டீஸ் நடிகர்களை தற்போதும் ரசிகர்கள் மறவாமல் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் ரகுமானும் ஒருவர் 1986 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய நிலவே மலரே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ரகுமான் ஆனால் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாகவே மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார் மேலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான். நடிகர் ரகுமானின் திருமண கதை சற்று சுவாரசியமானது.

-விளம்பரம்-
தனது இரண்டு மகள் மற்றும் மனைவியுடன் நடிகர் ரஹ்மான்

நடிகர் ரகுமானுக்கு ருஷ்தா, அலிஷா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் மேலும் இவரது மனைவியின் பெயர் மெஹர். நடிகர் ரஹ்மான் முதன் முதலில் மெஹரை ஒரு ஹோட்டலில் தான் சந்தித்துள்ளாராம். கடந்த 1992-ம் ஆண்டு ரஹ்மான் தனது நண்பர் ஈஷா என்பவருடன் சென்னையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார் அங்கே ஒரு குடும்பத்தை பார்த்திருகிறார் மூன்று மகள்கள் அந்த குடும்பத்தில் இருக்கையில் ரஹ்மானின் பார்வை மெஹர் மீது விழுந்துள்ளது. உடனே தனது நண்பர் ஈஷாவிடம் அந்தப் பெண்ணை நான் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எதிர்பாராதவிதமாக அந்த குடும்பத்தை ரஹ்மானின் நண்பரான ஈஷாவிற்கு ஏற்கனவே தெரிந்திருக்கிறது. இரண்டு மூன்று மாதங்கள் கழித்து திருமணம் செய்துகொள்ள ரகுமான் குடும்பத்தினர் அணுகி உள்ளார்கள்.

இதையும் பாருங்க : கோவிலில் இப்படி ட்ரெஸ் போடலாமா. ரசிகர் கேட்ட கேள்விக்கு மேகா ஆகாஷின் பதிலை பாருங்க.

- Advertisement -

இவர்களின் திருமணம் குறித்து பேசியுள்ள ஈஷா, எங்கள் திருமணத்தின் போது இரண்டு தடைகள் இருந்தது. ஒன்று நாங்கள் கொஞ்சம் உயர்மட்ட நடுத்தர குடும்பத்தினர் என்னுடைய அப்பா விமான ஓட்டியாக இந்தியன் ஏர்லைன்ஸ்ஸிலும் சவுதி ஏர்லைன்ஸிலும் பணியாற்றி இருக்கிறார். ஆனால், ரஹ்மான் திரை துறையை சேர்ந்தவர். இரண்டாவதாக என்னுடைய அக்கா சைரா திருமணம் ஆகாமல் இருந்தார். அதன்பின்னர் நவம்பர் 18ஆம் தேதி 92ஆம் ஆண்டு எங்களை அவர் பெண் பார்க்க வந்தார். ஒரு நடிகரை நேரில் கண்டதும் எனக்கு மிகவும் சந்தோஷமாகி விட்டது. அவரை பார்த்ததுமே ஒரு முழுமையாக ஆண்மகன் எனக்கு கிடைத்து விட்டான் என்று எனக்கு எண்ணம் தோன்றியது.

Image result for a r rahman marriage photos
தனது மனைவியுடன் ஏ ஆர் ரஹ்மான்

-விளம்பரம்-

ஆனால், என்னுடைய அப்பா சம்மதிப்பாரா என்ற ஒரு பயம் இருந்தது ஆனால் அவர் என்னுடைய அப்பாவையும் கவர்ந்து விட்டார். மேலும், எங்கள் திருமணம் ஏப்ரல் 2ஆம் தேதி 1993 ஆம் ஆண்டு நடந்தது என்று கூறியுள்ளார் ஈஷா. அதே போல எதிர்பாராத விதமாக திருமணம் ஆகாமல் இருந்த மெஹரின் அக்கா சாய்ராவிற்கு 1995 ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. சொல்லப்போனால் ஏ ஆர் ரஹ்மானும், நடிகர் ரஹ்மானும் நம்ம ஊர் பாஷையில் சொல்ல வேண்டும் என்ற சகலை என்றே கூறலாம். இதுநாள் வரை இது பலரும் அறிந்திடாத ஒரு விஷயமாக தான் இருந்து வருகிறது.

Advertisement