கோவிலில் இப்படி ட்ரெஸ் போடலாமா. ரசிகர் கேட்ட கேள்விக்கு மேகா ஆகாஷின் பதிலை பாருங்க.

0
72877
megha-akash
- Advertisement -

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் வரும் சினிமா பிரபலங்களின் புகைப்படங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இந்த புகைப்படங்களின் மூலம் ஒரு சில பேர் பெரிய அளவு பிரபலம் ஆகி விடுவார்கள் என்று சொல்லலாம். இந்த வகையில் தற்போது நடிகை மேகாஆகாஷ் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு நடிகை மேகா ஆகாஷ் விளக்கமும் கொடுத்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ‘லை’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

நடிகை மேகா ஆகாஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த ‘பேட்ட’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘வந்தா ராஜாவா தான் வருவேன், பூமராங், என்னை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த வருடம் மட்டும் நிறைய இளம் நடிகைகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். ஆனால், அறிமுகமான குறுகிய காலத்திலேயே நடிகை மேகா ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதுமட்டுமில்லாமல் தமிழில் அறிமுகமான ஒரே ஆண்டிலேயே நான்கு படங்கள் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : தன் வாழ்வில் மிக முக்கியமான பெண்ணுக்கு மேடையில் கவின் சொன்ன கவிதை. யாருக்கு தெரியுமா ?

- Advertisement -

நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர். இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோக்கள் அனைத்தும் பதிவிட்டு வருவார். இதனாலேயே இவரை 16 லட்சத்திற்கும் மேலாக ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மேலும், இவருக்கு என ஒரு தனி அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அதில் அவரைக் குறித்து பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள். அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மேகா. சோசியல் மீடியாவில் தன்னுடைய தினமும் நடக்கும் நிகழ்வுகளை குறித்து நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் பதிவிட்டு வருவார்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது நடிகை மேகா அவர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதை பார்த்து ரசிகர் ஒருவர் “கோவிலில் இப்படி எல்லாம் துணி போடலாமா”? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு மேகா அவர்கள் கூறியது, “இது ஒன்னும் கோவில் கிடையாது” என்று பதிலளித்து உள்ளார். சோசியல் மீடியாவில் பிரபலங்களின் புகைப்படங்கள் வந்தாலே போதும் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்துகிறது. எப்போதுமே சினிமா பிரபலங்கள் இந்த விஷயங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

ஆனால், இது கோவில் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் உடனடியாக அந்த நபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளார். நடிகை மேகா ஆகாஷ் அவர்கள் தெலுங்கில் மனோ சைத்ரா என்ற படத்திலும், தமிழில் ‘யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், யாதும் ஓரே யாவரும் கேளிர்’ என்ற படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிய வந்து உள்ளது.

Advertisement