கண்டிப்பா செய்றேன் ஜி, நன்றி.! மோடியின் கோரிக்கையை ஏற்ற இசை புயல்.! வைரலாகும் ட்வீட்.!

0
847
Modi-A-R-rahman
- Advertisement -

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவிருப்பதால் பல்வேறு கட்சிகளும் பிரபலங்கள் மூலம் மக்கள் மத்தியில் ஆதரவை திரட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இசை புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு செய்த ட்வீட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

இந்தியாவில் நாடுளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் , வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கைவிடுத்தது வருகிறார்.

- Advertisement -

பிரதமரின் இந்த கோரிக்கையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்றுக்கொண்டுள்ளார். வாக்காளர்களுக்கு அவர்களது வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பாடகர் லதா மங்கேஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிலளித்துள்ள ஏ.ஆர். ரகுமான். நிச்சயம் செய்வோம் என்றும் அழைப்புக்கு நன்றி என்றும் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement