தலைவன் வேற ரகம் பாத்து உஷாரு. கலாய்க்குருதலையும் நம்ம ரஹ்மான் புயல் தான்பா.

0
62871
a-r-rahman
- Advertisement -

இசைப்புயல் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான். உலகம் முழுவதும் உள்ள புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். தன்னுடைய இசை திறமைக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து விரைவில் 99 சாங்ஸ் படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

தற்போது இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஏ ஆர் ரகுமானை கலாய்த்து உள்ளார்கள். விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் இசை காவியமாக உருவாகி உள்ள பாலிவுட் படம் தான் 99 சாங்க்ஸ். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் இந்த படத்தை தயாரித்தும் உள்ளார். ஏகன் பாட், எடில்சி வர்காஸ் உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள். இந்த படம் காதல், இசை என அனைத்தும் கலந்த காவியமாக உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்தும், தயாரித்தும் உள்ளார். இந்த படம் கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், பல்வேறு காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் தற்போது சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து உலக அளவில் இந்த படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட உள்ளதாக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இப்படி ஏ ஆர் ரகுமான் அவர்கள் பதிவை பார்த்த ரசிகர்கள் 2050ல் வருதா?? என்று கலாய்த்து கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இதனால் ஏ.ஆர்.ரகுமான் மிகவும் அப்செட் ஆகியுள்ளார். ஆனாலும், மனம் கலங்காமல் செம கூல் ஆக ஏ ஆர் ரகுமான் அவர்கள் கமெண்ட் போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் வாயடைத்து கொண்டார்கள். இதனை தொடர்ந்து உலக அளவில் வெப்பமயமாதல் பிரச்சனை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு தான் இருக்கிறது.

இது குறித்து உலக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஏ ஆர் ரகுமான் அவர்கள் புது பாடல் தொகுப்பை ஒன்றை உருவாக்க போவதாக நேற்று திருச்சியில் அறிவித்திருந்தார். அதன் சம்பந்தமாக தனது படத்திற்கான வேலைகளை கூட நிறுத்தி விட்டார். அதுமட்டுமில்லாமல் ஏ ஆர் ரகுமான் அவர்கள் மணிரத்தனம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன், விக்ரமின் கேப்ரா, மற்றும் சிவகார்த்திகேயன் அயலான் என பல தமிழ் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். பாலிவுட்டில் கரண் ஜோஹர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தக்த் படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement