எளிமையாக நடந்த திருமணம், Twins குழந்தைகள் ஆடுகளம், விசாரணை பட நடிகரின் அறிந்திராத பக்கம்.

0
558
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் வந்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள். அந்த வகையில் சொல்லவேண்டும் என்றால் ஆடுகளம் முருகதாஸ் அவர்களை சொல்லலாம் முருகதாஸ். அந்த படத்திற்கு பிறகு இவர் பல படங்களில் நடித்து விட்டார். ஒரு படத்தில் கதாநாயகனாக கூட நடித்திருந்தார். இந்நிலையில் குருகதாஸ் தன்னுடைய வழ்க்கை பயணத்தை நடங்கங்களின் மூலம் தான் தொடங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

பாண்டிசேரியை சேர்ந்த முருகதாஸ். இவர் கடந்த 2000ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் டிராமா ட்ருப்ல் இருந்து அங்கே சில நாடங்கள் நடித்து பின்னர் சென்னை காந்தி மண்டபம் புங்கவில் படுகளம் என்ற நாடகத்தில் நடித்துள்ளார். இந்த நாடகத்தில் இயக்குனர் தரணி பார்க்க வந்துள்ளார். இந்நிலையில் தரணி கண்ணில் முருகதாஸ் பட்ட நிலையில் முருகதாஸுக்கு விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கில்லி படத்தில் ஆதிவாசியாக நடித்திருப்பார் முருகதாஸ்.

- Advertisement -

ஹிட் அடித்த படஙகள் :

அதனை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்க தனுஷ் நடித்த “புதுப்பேட்டை”, இயக்குனர் பிரியதர்சர்ஷன் இயக்கிய “காஞ்சிவரம்”, சுசிந்தர் இயக்கிய “வெண்ணிலா கபடி குழு” போன்ற படங்களில் நடித்தார். இப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய ஹிட் அடித்தது. ஆனால் இப்படங்களை விட சுரேஷை பெரிய பிரபலமாக்கியது கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான தனுஷ் நடித்த “ஆடுகளம்” திரைப்படம் தான்.

விசாரணை படம் :

இப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. அதோடு தனுஷ் நண்பராக ஆடுகளம் முருகதாஸ் நடித்திருந்தால் இது இவரை மேலும் பிரபலமாக்கியது. அதனை தொடர்ந்து முகமூடி, இது கதிர் வேலன் காதல், குட்டி புலி போன்ற ஹிட் படங்களுக்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் “விசாரணை” படத்தில் நடித்தார். இப்படத்தை பற்றி முருகதாஸ் கூறுகையில் தான் எத்தனையோ படங்கள் நடித்தும் விசாரணை படம் தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத படம் என்று ஒரு பேட்டியில் கூட கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் நடித்த படங்கள் :

சொல்லப்போனால் இவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகத்தான் இருக்கும். இவர் முதன் முதலில் நடித்த கில்லி எவர்க்ரீன் விஜய் படமாக இன்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆடுகளம் முருகதாஸ் தற்போது சில படங்களை மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் கூட சமுத்திரக்கனி நடித்த தலைக்குத்தல், செல்வராகவன் நடித்த சாணி காகிதம் போன்ற வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் கடந்த ஆண்டு வெளியான நயன்தாரா நடித்திருந்த O2 படத்தில் கூட பஸ் ட்ரைவர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஆடுகளம் முருகதாஸ். இந்நிலையில் ஆடுகளம் முருகதாஸ் கடந்த 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஆண், பெண் என இரண்டு குழந்தைகளும் ஒரே நேரத்தில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement