ஆஹா கல்யாணம் பவி டீச்சருக்கு அடித்த லக். முதல் படமே இவருடனா.

0
130420
brigida
- Advertisement -

சமூக வலைத்தளங்களில் ஒன்றான யூடியூபில் ஒளிபரப்பாகும் ‘ஆஹா கல்யாணம்’ என்ற வெப் சீரிஸ் வேற லெவல்ல மாஸ் காட்டி வருகிறது. மேலும், இந்த ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸ்க்கு என எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். அதோடு இந்த ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமானவர் நடிகை பிரிகிதா. இவர் தற்போது விஜய்யின் அடுத்த படமான “தளபதி 64” படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், யூடியூப் சேனலில் பிரபலமான நடிகைக்கு இப்படி ஒரு ‘ஜாக்பாட்டா’ என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வெற்றி வாகை சூடி கொண்டு,வெறித்தனமாக போய்க் கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்த தகவல்கள் இணையங்களில் வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-
Image

மேலும், இந்த தளபதி 64 படத்திற்கு பெயர் இன்னும் வைக்கவில்லை. அதோடு இந்த படத்தை மாநகரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது. மேலும்,ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் நடித்த நடிகை பிரிகிதா இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த ஆகா கல்யாணம் கதை காதலில் தோல்வி அடைந்த இளைஞர்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையாகும். இந்த கதையில் பவி டீச்சராக நடித்து வருபவர் பிரிகிதா. இதை பார்த்தால் பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து வந்த சாய்பல்லவி போன்று பிரிகிதா பிரபலமானார். மேலும்,பிரிகிதாவுக்கு என்று தனி ரசிகர்கள் படை உள்ளது என்று கூட சொல்லலாம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் கலக்கிய பிரிகிதா தற்போது வெள்ளித்திரையிலும் பட்டையை கிளப்ப போகிறார் என்று தெரியவந்தது.

- Advertisement -

ஆமாங்க, விஜய் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்று தெரிந்தவுடன் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரிகிதா ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள். மேலும், பிரிகிதாவிற்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் தளபதி 64 படத்தில் ஆண்ட்ரியா நடிக்க உள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஸ்ரீமன்,சாந்தணு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முக்கியமான நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படத்தை எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள்.

Image

அதோடு இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு வரும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு கல்லூரியில் சமீபத்தில் தான் தொடங்கியது. மேலும்,இந்த படத்தில் விஜய் கல்லூரி ஆசிரியராக பணிபுரிகிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு வட சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. மேலும், வட சென்னையில் முடிந்த படப்பிடிப்பை படக்குழுவினர் தற்போது டெல்லியில் நடத்தி வருகின்றனர். இந்த ‘தளபதி 64’ படப்பிடிப்பு டெல்லியில் 20 நாட்கள் தங்கியிருந்து நடத்துகிறார்கள் படக்குழுவினர் என்பது குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement