ஆளவந்தான் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த இருவர் தான்.! பல வருட ரகசியம்.!

0
144
Alavanthan
- Advertisement -

உலக நாயகன் கமல் எண்ணற்ற பல வித்யாசமான இரட்டை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அதில் கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ” ஆளவந்தான்” படம் வித்தியாசமான கதை களம் கொண்ட கதையாக இருந்தது.

simran

கிட்டத்தட்ட 650 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட இந்த படம் அந்த ஆண்டின் பிரமாண்ட படமாக இருந்தது என்றே கூறலாம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக இந்தி நடிகை நவீன தண்டூன் நடித்திருந்தார். ஆனால், இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது நடிகை சிம்ரன் தானம்.

- Advertisement -

அந்த கதாபாத்திரத்தில் முதலில் சிம்ரனை நடிக்கவைக்கதான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம் ஆனால், அப்போது கால்சீட் பிரச்சனையால் சிம்ரனால் அந்த படத்தில் கமலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க முடியாமல் போனதாம். ஆனால், அதன் பின்னர் கமலுடன் ‘பம்மல் கே சம்மந்தம், பஞ்ச தந்திரம்’ போன்ற படங்களில் சிம்ரன் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Rani-Mukargee

அதே போல ‘ஆளவந்தான்’ படத்தில் படத்தில் மனிஷா கொய்ராலாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இவரது கதாபாத்திரத்திலும் முதலில் இந்தி நடிகை ராணி முகர்ஜி தான் நடிக்க இருந்ததாம் ஆனால், சில பல காரணங்களால் அவரும் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Advertisement