கோதுமை பாக்கெட்டுக்குள் ரூ.15 ஆயிரம் வைத்து கொடுத்தது இவராக இருக்கலாம் – அமீர் கான் விளக்கம்.

0
1817
ameer
- Advertisement -

உலகமெங்கும் தற்போது ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருகிறது. ஆகையால், ‘144’ போடப்பட்டுள்ளது. தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல படங்களின் டீம் திட்டமிட்டு வைத்திருந்த தங்களது ஷூட்டிங் ப்ளானை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

-விளம்பரம்-

‘கொரோனா’ பிரச்சனை முடிந்து எப்போது அனைத்து படங்களின் பணிகளும் துவங்கப்போகிறது என்பது பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது கொரோனா நிவாரண பணிகளுக்காக பல முன்னணி நடிகர்கள் நிதியுதவி கொடுத்து உதவி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கோதுமை பாக்கெட்டுகள் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்தார் என்று கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி வைரலாக பரவியது.

இதையும் பாருங்க : 7g ரெயின்போ காலனி படத்தின் டெலீட் செய்யப்பட்ட காட்சி – ரவிகிருஷ்ணா பகிர்ந்த செம பதிவு.

- Advertisement -

இந்த ‘கொரோனா’ லாக் டவுன் டைமில் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தலா ஒரு கிலோ கோதுமை மாவு கொடுக்கப்படும் என்று நடிகர் அமீர் கான் தெரிவித்ததாக போலியான தகவல் வெளியானது. மேலும், இதனை தெரிந்து கொண்ட மக்கள் பலரும், ஒரு கிலோ கோதுமை மாவு தானே என்று நினைத்து அவரிடம் இருந்து அதனை வாங்க செல்லவே இல்லையாம். அந்த ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்டினுள் ரூ.15 ஆயிரம் பணம் இருந்திருக்கிறது என்றும் செய்திகள் பரவியது.

ஆனால், இதுகுறித்து எந்தவித விளக்கமும் அளிக்காமல் மவுனம் காத்துவந்த அமீர்கான். தற்போது டுவிட்டரில் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “கோதுமை பாக்கெட்டுக்குள் பணம் வைத்துக் கொடுக்கும் மனிதன் நானல்ல. அது முற்றிலும் போலியான தகவலாக இருக்கலாம் அல்லது அதை செய்த ராபின் ஹுட் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள கூடாது என விருப்பப்பட்டிருப்பார்” என பதிவிட்டுள்ளார். 

-விளம்பரம்-
Advertisement