தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ரியோ ராஜ். இவருடைய நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஆண்பாவம் பொல்லாதது. இந்த படத்தை இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கி இருக்கிறார். இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மாளவிகா மனோஜ், ஷீலா ராஜ்குமார், விக்னேஷ் காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:
படத்தில் ரியோ ராஜ் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இவர் செம மாடர்ன் சிந்தனை கொண்ட ஹீரோயினி மாளவிகா மனோஜை திருமணம் செய்து கொள்கிறார். ஆரம்பத்தில் இருவருக்குள்ளும் சந்தோஷமாகத்தான் இவர்களுடைய வாழ்க்கை செல்கிறது. அதற்கு பிறகு இருவருக்கும் நிறைய சண்டைகள் வருகிறது. ஒரு கட்டத்தில் இவர்களுடைய பிரச்சனை பூகம்பமாக வெடித்து கோர்ட் வரை வந்து விடுகிறார்கள்.
அதற்கு பிறகு என்னானது? யார் பக்கம் நியாயம்? யார் வென்றார்கள்? இருவரும் சேர்ந்தார்களா? ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்தார்களா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. இந்த படத்தை மிகவும் கலகலப்பாக இயக்குனர் கொண்டு சென்றிருப்பது பாராட்டக் கூடிய விஷயம். படத்தில் ரியோ உடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. இந்த படத்தில் இவருடைய நடிப்பின் மூலம் இன்னும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இவரை அடுத்து மாளவிகா நடிப்பும் நன்றாக இருக்கிறது.

ஜோ படத்தில் நடித்த பெண்ணா? என்று எல்லோருமே வாயை பிளக்கும் அளவிற்கு தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவிலும் இவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ரியோவிற்கு எந்த அளவிற்கு இந்த படத்தில் முக்கியத்துவம் கிடைத்ததோ அதேபோல் விக்னேஷ் நடிப்பும் இருக்கிறது. இவருடைய காமெடி, கருத்துக்கள், வசனங்கள் எல்லாமே நன்றாக இருக்கிறது. படத்தினுடைய முதல் பாதி சிரிப்பு சரவெடி தான்.
இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பையும் காமெடியையும் கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். இருந்தாலும் விக்னேஷ் காந்துடைய கவுண்டர் வசனம் எல்லாம் நன்றாக இருந்திருக்கிறது.
அதேபோல் எமோஷனல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். டெக்னிக்கலாக படம் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஒளிப்பதிவு எல்லாம் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ஒருமுறை சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.
நிறை:
ரியோ, மாளவிகா நடிப்பு
படத்தின் முதல் பாதி சூப்பர்
வசனங்கள் நன்றாக இருக்கிறது
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

குறை:
இரண்டாம் பாதியை இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம்
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
எமோஷன் காட்சிகளை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம்
மொத்தத்தில் ஆண்பாவம் பொல்லாதது - காமெடி கலாட்டா






