ஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் !

0
6717

விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னரான ஆரவ்,ஓவியா குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது, இருப்பினும் எனக்கென ஒரு அறிமுகம் தேவை என்பதற்காக பிக் பாஸில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்.

Image result for aarav big boss

நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அனைத்தும் ஸ்கிரிப்ட் படி நடக்கும் என்றே நினைத்து சென்றேன்,
ஆனால் அங்கு சென்று பார்த்தால் நிலைமை அப்படியில்லை.

எங்களுக்கு தேவையான வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்தாக வேண்டும். எங்கள் துணியை நாங்களே துவைப்போம், வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து உறங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.

Image result for aarav big boss

பிக் பாசின் இறுதி நாட்களில் டாஸ்க்குகள் மிகவும் பயங்கரமாக இருந்தது. பிக் பாஸ் எங்களை ரொம்பவே சிரமப்படுத்தினார். எங்கள் பொறுமையை முடிந்த வரை சோதித்தனர். அதுவே அவர்கள் குறிக்கோளாக இருந்தது.

ஆனால் அதை எல்லாம் கடந்து இந்த வெற்றி கிடைத்ததை நான் ஆச்சர்யமாகவே பார்க்கிறேன். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக பலர் போலியாக நடித்தனர். அதில் சுஜா வருணி ஒரு முக்கியமான ஆள். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும், தன்னை பரிதாபமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர் மிகவும் நல்லவர் போல நடித்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றுவதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. நான் நானாகவே இருந்ததனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. எல்லா பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் பிரிவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர் ஓவியாவை பற்றி பேசத்தொடங்கினார்.

Image result for aarav big boss

ஓவியா மிகவும் பிரபலமான நடிகை, என்னுடைய சிறந்த தோழி, அவர் எப்போதும் அவராகவே இருப்பார், போலியாக ஒருபோதும் நடித்ததில்லை. ஆனால் பல நேரங்களில் குடும்பத்தினருடன் ஒத்துப்போகாமல் பிடிவாதம் செய்திருக்கிறார். அதனாலேயே மற்றவர்கள் ஓவியாவை விலக்கினார்கள். நான் ஓவியாவுடன் நெருக்கனான தோழனாக இருந்தேன், அவர் ஒரு பேன், அவரின் பெயர் கெட்டுப்போகமால் இருக்கவே நான் பல விசயங்களை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அந்த மருத்துவ முத்தம் உட்பட பல விஷயங்கள் வெளியேறி எங்கள் இருவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.

Image result for aarav big boss

பிக் பாஸில் இருந்த மற்றவர்களை காட்டிலும் ஒவியாதான் மிகவும் நல்லவர். ஓவியா விஷயத்தை நான் சரியாக கையாண்டிருக்கலாம், அவரை நான் புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ஓவியா கட்டாயம் பிக் பாசின் வெற்றியாளராய் இருந்திருப்பார். நான் அவரை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.” என்றார்.