ஒன்றாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஆரி – ஐஸ்வர்யா..!குவிவும் பாராட்டு..!

0
322

நெடுஞ்சாலை திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரி. இவரும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் தொடங்கியது.

இன்னும் பெயர் அறிவிக்கப்படாத இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிக வித்தியாசமாக டிக்டோக் செயலின் நடன பதிவு மூலம் வெளியிட்டனர் பட குழுவினர். இப்படி ஒரு புதுமையான ஐடியாவை வைத்து படத்திற்கான மார்க்கெட்டிங் செய்வது இதுவே முதல் முறை.

சென்னையைச் சுற்றி பல இடங்களில் இந்த படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில் இன்று டிசம்பர் 25 தேதி கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்தனர்.

மேலும் அந்த குழந்தைகளுக்கு பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.