ஜெயம் ரவி- ஆர்த்தி விவாகரத்து வழக்கு குறித்த செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகளின் விவாகரத்து குறித்த செய்தி தான் மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சமந்தா-நாக சைதன்யா, தனுஷ்-ஐஸ்வர்யா, ஜிவி பிரகாஷ் - சைந்தவியை தொடர்ந்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது. இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து ரொம்ப கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:
இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வந்தது. மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க. கெனிஷா வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி இந்த இடத்திற்கு வந்தவர். நிறைய பேருக்கு உதவி செய்திருக்கிறார்.

ஜெயம் ரவி பேட்டி:
நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். இதை அடுத்து தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்பட்டது. மேலும், இவர்களுடைய பிரச்சினை நாளுக்கு நாள் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

விவாகரத்து வழக்கு:
அதன் பின் ஜெயம் ரவி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து ரவி மனுதாக்கல் செய்திருந்தார். சில வாரங்களுக்கு முன் தான் ஜெயம் ரவியின் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரிலும், ஆர்த்தி காணொளி மூலமும் ஆஜராகி இருந்தார். அவருக்கு உடல்நிலை சரி இல்லாததால் தான் நேரில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. பின் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவரையும் ‘சமரச தீர்வு’ மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கூறியிருந்தது.

சமரச தீர்வு:
இப்படி இருக்கும் நிலையில் சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் ஆஜராகி இருந்தார்கள். ஒரு மணி நேரம் இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்திருந்தது. இருந்தாலுமே இருவருக்கும் இடையே எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதை அடுத்து ஜெயம் ரவி -ஆர்த்தி விவாகரத்து வழக்கை அடுத்த மாதம் ஏழாம் தேதிக்கு ஒத்தி வைக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.






