‘என் வார்த்தையை தவறாக புரிந்து கொண்டார்கள்’- விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுத்த ஆர்த்தி ரவி

0
291
- Advertisement -

தன்னை குறித்த விமர்சனங்களுக்கு ஆர்த்தி ரவி கொடுத்திருக்கும் விளக்கம் தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாகி இருந்தது. அதற்கேற்ப சமீபத்தில் ஜெயம் ரவி தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார். இது பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் பேரிடியாக விழுந்தது.

-விளம்பரம்-

இதை அடுத்து இது தொடர்பாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திருமண பந்தத்தில் இருந்து பிரிய வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று கூறி இருந்தார்.

- Advertisement -

ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:

இதை அடுத்து ஜெயம் ரவி- ஆர்த்தி பிரிந்ததற்கு காரணம் பாடகி கெனிஷா தான் என்றும், இருவருக்கும் இடையே பழக்கம் இருப்பதால் பிரிந்தார்கள் என்றெல்லாம் செய்திகள் வருகிறது. இதனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜெயம் ரவி செய்தியாளர்கள் சந்திப்பில், ஒரு பாடகியுடன் என்னை தொடர்பு படுத்தி பேசுகிறார்கள். அப்படி எல்லாம் பேசாதீங்க. கெனிஷா, வாழ்க்கையில் சொந்தமாக கஷ்டப்பட்டு முயற்சி செய்து இந்த இடத்திற்கு வந்தவர்.

ஜெயம் ரவி பேட்டி:

நானும் அவரும் சேர்ந்து ஹீலிங் மையம் ஒன்றை தொடங்குவது தான் எங்களுடைய நோக்கமே. அதை கெடுக்காதீங்க. அதை யாரும் கெடுக்கவும் முடியாது என்று கூறியிருந்தார். அதேபோல் தன்னுடைய உடமைகள் எல்லாம் மீட்டு தர சொல்லி ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து பயில்வான் ரங்கநாதன் எடுத்த பேட்டியில் கூட ஜெயம் ரவி, என்னுடைய மனைவி பற்றி என் மகன்களுக்கு தெரியாது. அவர் எப்போதும் அவருடைய அம்மா தான். இந்த விஷயத்தில் என்னுடைய மாமியார் தான் ரொம்ப கொடுமைக்காரர்.

-விளம்பரம்-

ஆர்த்தி அறிக்கை:

யாருக்காகவும் என்னுடைய கேரியரை அழித்துக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் சொன்னதாக கூறியிருந்தார். இப்படி நாளுக்கு நாள் ஜெயம் ரவி விவகாரம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு ஆர்த்தி எந்த ஒரு பதிவுமே போடாமல் அமைதியாக இருந்தார். இதனால் பலருமே ஆர்த்தியை தான் டார்கெட் செய்து விமர்சித்து வந்தார்கள். இந்த நிலையில் தன் தரப்பு நியாயத்தை தெரிவித்து மீண்டும் ஆர்த்தி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், என்னுடைய மௌனம் பலவீனமோ, குற்ற உணர்ச்சியோ கிடையாது.

விமர்சனங்களுக்கு கொடுத்த பதில்:

நான் கண்ணியமாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். உண்மையை மறைத்து என்னை மோசமாக சித்தரிக்க நினைப்பவர்களுக்கு நான் பதில் கொடுக்க முயற்சி செய்யவில்லை. ஆனால், நான் சட்டை தன் நம்புகிறேன். அதன் மூலமாக நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். இதற்கு முன்பு நான் வெளியிட்ட அறிவிப்பை தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. அந்த விவாகரத்து அறிவிப்பானது என்னுடைய ஒப்புதல் இல்லாமல் வெளியிடப்பட்டது என்று தான் நான் சொன்னேன். அந்த விவகாரத்தை பற்றி எனக்கு தெரியாது என்று நான் சொன்னதாக என்னுடைய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டார்கள். நான் இன்னும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் உரையாட தயாராக இருக்கிறேன். அவருடன் பேச வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் யாருடைய புகழையும் கெடுக்கும் வகையில் பொதுஇடத்தில் பேச மாட்டேன். என்னுடைய கவனம் முழுக்க குடும்பத்தின் நலன் மீது தான் இருக்கிறது. திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement