சிறு வயதில் விஜய் டிவி சீரியலில் நடித்து உள்ள ஆயுத எழுத்து ஸ்ரீத்து

0
16540
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பல்வேறு பிரபலமான சீரியல்களில் ட்ரெண்டிங் சீரியலாக விளங்கி வருவது ஆயுத எழுத்து. இந்த சீரியலில் கலெக்டர் இந்திரா கதாபாத்திரத்தில் முதலில் நடித்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீத்து கிருஷ்ணன். இவர் முதன் முதலாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். அதற்குப் பிறகு இவர் ஜீ தமிழ், விஜய் டிவி என மாறி மாறி சீரியல்களில் நடித்து வந்திருந்தார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த சீரியல் கிராமத்து பின்னணியில் உருவாகி வந்த கதை. இந்த சீரியலில் ஸ்ரீத்து அவர்கள் பெண் தாதாவின் மகனுடன் காதல் வயப்பட்தும், நேர்மையான சப் கலெக்டராகவும் வரும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த சீரியல் மூலம் பல ரசிகர்களை ஸ்ரீத்து கவர்ந்தார். திடீரென்று ஸ்ரீத்து இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து பார்க்கையில் ஸ்ரீத்து வைத்து சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களை வந்து இருந்தது. அதாவது விஜய் டிவியில் படிச்சு,விஜய் டிவிக்கே கலெக்டர் ஆயிட்டாங்க நம்ம ஸ்ரீத்து என்று பல மீமிஸ்கள் இணையங்களில் வந்தது. இதனால் தான் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

தற்போது ஆயுத எழுத்து சீரியலில் இவருக்கு பதிலாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான் நடித்து வருகிறார். இருப்பினும் ஸ்ரீத்து தான் இந்திரா கலெக்டர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருந்தார் என்று பலர் புலம்பி வருகிறார்கள். இந்நிலையில் ஸ்ரீத்து நடித்த முதல் சீரியல் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 2012 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு ‘c’ பிரிவு(7c) என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரீத்து. இந்த சீரியல் தான் இவர் முதன் முதலாக நடித்த சீரியல். இந்த சீரிய முழுக்க முழுக்க பள்ளி மனவர்க்ளின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

இந்த சீரியலில் ஆசிரியராக நடிகர் ஸ்டாலின் நடித்திருந்தார். இந்த 7c சீரியல் பள்ளி மாணவர்களின் கலாட்டாக்கள், ஆசிரியர்களின் சிறப்பினை எடுத்துக் கூறும் வகையில் அமைந்து உள்ளது. மேலும், நடிகர் ஸ்டாலின் மாதிரி ஒரு அன்பான பாசமான எங்கும் கிடைக்கமாட்டார். இந்த சீரியலில் ஸ்டாலின் மாணவர்களை உள்ளங்கையில் கொண்டு கவனிப்பவர். நமக்கும் இந்த மாதிரி ஒரு ஆசிரியர் கிடைத்தால் எப்படி இருக்கும் என்று பல மாணவர்கள் கூறியிருந்தார்கள். இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் பெற்றது. இந்த சீரியல் மூலம் தான் சின்னத் திரைக்கு அறிமுகமானார் ஸ்ரீத்து. இதனை தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் இந்த 7c சீரியலில் நடித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் ரசிகர்கள் நம்ம ஸ்ரீத்துவா என்று வியந்து போய் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Advertisement