சமீப காலமாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் வெள்ளித்திரையை போல சின்னத்திரையிலும் பல்வேறு நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். குறிப்பாக சீரியலில் ரீல் ஜோடியாக நடித்த பல நடிகர், நடிகைகள் ரியல் ஜோடிகளாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் ரியல் ஜோடிகள் ஆனவர்கள் மதன் மற்றும் ரேஷ்மா.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் பூவே பூச்சூடவா. இந்த தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள் ரேஷ்மா மற்றும் மதன். மதன் இதற்கு முன்னாடியே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்திருக்கிறார். இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் மூலம் ரேஷ்மா மற்றும் மதன் இருவருமே மக்கள் மத்தியில் இடம் பிடித்து இருந்தார்கள். பின்னர் இந்த சீரியல் முடியும் நேரத்தில் இருவரும் காதலிப்பதாக சோஷியல் மீடியாவில் அறிவித்திருந்தார்கள்.
ரேஷ்மா-மதன் திருமணம்:
இது ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஷாக்கிங் ஏற்படுத்தி இருந்தது. மேலும், பூவே பூச்சூடவா சீரியல் முடிந்தவுடன் இருவரும் இணைந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகின்றனர். பிறகு இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். மேலும், திருமணத்திற்கு பிறகும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்து கொண்டு வருகிறார்கள்.
ரேஷ்மா நடிக்கும் சீரியல்:
இது ஒரு பக்கம் இருக்க, ரேஷ்மா எப்போதுமே சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பார். தான் அடிக்கடி நடத்தும் போட்டோஷுட் புகைப்படம் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம், ரிலீஸ் வீடியோ என அனைத்தையுமே பகிர்ந்து வருவார். அதிலும் இவர் விதவிதமான ஸ்டைல் அண்ட் லுக்ஸ் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்நிலையில் ரேஷ்மா அபி டெய்லர் சீரியலில் நடிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ரேஷ்மா பற்றிய விவரம்:
ரேஷ்மா கேரளாவில் உள்ள கோட்டயத்தில் பிறந்தவர். இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் தான் முடித்தார். பின் 2015 ஆம் ஆண்டு ஃபேஸ் ஆஃப் சென்னை அழகி போட்டியில் பங்கேற்று முதல் 10 இடங்களில் ரேஷ்மா வந்திருந்தார். இதனையடுத்து 2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில் 2-வது இடத்தையும் ரேஷ்மா பிடித்து இருக்கிறார். இது மட்டுமில்லாமல் ரேஷ்மா முரளிதரன் யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். மேலும், நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0 என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
அபி டெய்லர் சீரியலில் ரேஷ்மா நடிக்க காரணம்:
இதனை அடுத்து அதே சேனலில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் ரேஷ்மா மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அபி டெய்லர் என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இந்த அபி டெய்லர் சீரியலில் நடிப்பதற்கு ரேஷ்மாவின் குடும்ப பின்னணியும் ஒரு காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், உண்மையிலேயே ரேஷ்மாவின் அம்மா ஒரு டெய்லர். அவர் கஷ்டப்பட்டு தான் தன் குழந்தைகளை வளர்த்தார். இதனாலேயே தான் ரேஷ்மா இந்த சீரியலில் மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்து வருகிறாராம்.