நேற்று பாத்திமா பாபு விடைபெறும் போது அவருக்கு ஒரு சூப்பர் பவர் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் இந்த வாரத்திற்கான தலைவர் பொறுப்பில் போட்டியிட மூன்று நபர்களை தேர்வு செய்யுங்கள் என்று கூறினார் கமல். அப்போது அபிராமி, தர்ஷன், சாண்டி ஆகியோரின் பெயரை ரெகமண்ட் செய்தார் பாத்திமா.
இந்த நிலையில் ஒன்று தர்ஷன். சாண்டி, அபிராமிக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த டாஸ்க் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே சாண்டி மற்றும் தர்ஷன் அந்த டாஸ்கில் இருந்து விலகி அபிராமியை வெற்றி பெற செய்தனர்.
இதையும் பாருங்க : அபிராமி நடந்து கொண்ட மோசமான விதம்.! நிகழ்ச்சியில் வராததை சொன்ன பாத்திமா.!
இப்படி இருவரும் விட்டுக்கொடுக்க எதற்காக இந்த டாஸ்கை வைத்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டின் தலைவரானார் அபிராமி. இதனால் இந்த வார நாமினேஷனில் இருந்து காப்பாற்றபட்டுள்ளார் அபிராமி.
அதே போல இந்த வார நாமினேஷனில் மீரா, மது ,சேரன், சரவணன், வனிதா ஆகியோர் இடம்பெறுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல அபிராமி, ஷெரின், சாக்க்ஷி ஆகியோரின் பெயர் நாமினேஷனின் லிஸ்டில் வரவில்லை.