அபிராமி நடந்து கொண்ட மோசமான விதம்.! நிகழ்ச்சியில் வராததை சொன்ன பாத்திமா.!

0
6876
fathima
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று (ஜூலை 8 )வெளியேற்றபட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்தார் பாத்திமா.

-விளம்பரம்-
fathima

அப்போது வனிதா குறித்து தெரிவிக்கையில் அவர் தான் சொல்வது தான் நடக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய குரல் அதிகமாக இருப்பதால் அவர் நிறைய ஆதிக்கம் செலுத்துகிறார். அதே போல ரேஷ்மா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் வனிதாவின் கட்டுபாட்டில் தான் இருக்கிறார்கக்ள், அதில் அபிராமி கொஞ்சம் வெளியில் வந்து விட்டார் என்று கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்துள்ள பாத்திமா, அபிராமி குறித்து பேசுகையில் அபிராமி மிகவும் சென்சிடிவ் கொஞ்சம் கோபம் வந்தாலும் தைய தாக்கானு குதிப்பா, மேலும் அவர் நகத்தால் கை எல்லாம் பிராண்டிக்கிட்டா. அப்போது அவரது காயத்திற்கு நான் தான் மருந்து போட்டு விட்டேன் என்று கூறியுள்ளார்.

அதே போல முதல் நாளில் இருந்தே அந்த பெண்ணின் நடவடிக்கை சரியில்லை . அவர் கொஞ்சம் மன ரீதியாக பாதிக்கபட்டதால் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது வனிதா, இது போன்ற ஆட்களை எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அனுப்பி விட வேண்டும் என்றார். அந்த பெண் அவ்வளவு சென்சிடிவ் என்றும் தெரிந்தும் வனிதா அவரை கடுமையாக திட்டினார். நான் ஏன் என்று கேட்டதற்கு உங்களுக்கு இது தேவை இல்லாத வேலை என்று கூறிவிட்டார் வனிதா என்று பாத்திமா ஷாக் கொடுத்துள்ளார்.ஆனால், அதனை தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லை.

-விளம்பரம்-
Vanitha

பாத்திமா சொன்னதை வைத்து பார்க்கும் போது அபிராமி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெளியேற வேண்டும் என்று கேட்கப்பட்டபோது மதுமிதாவிற்கு பதிலாக மீராவிற்கு வாக்களித்ததால் வனிதா, சாக்க்ஷி, ஷெரின், ரேஷ்மா ஆகிய அனைவரும் அபிராமியை திட்டித் தீர்த்தனர்.

அப்போது சாப்பாட்டை பாதியில் நிறுத்திவிட்டு பாத் ரூமிற்க்கு சென்ற அபிராமி தேம்பி தேம்பி அழுதார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து தன்னை வெளியிற்றிவிடுமாறும் கதறினார். அப்போது மதுமிதா தான் அவரை சமாதானம் செய்தார். இந்த சம்பவத்தின் போது தான் அபிராமி, பாத்திமா கூறியது போல நடந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement