இந்தியில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் அமீதாப் பட்சன். இவரது மகன் தான் அபிஷேக் பட்சன். பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் அபிஷேக் பட்சனும் ஒருவர். இவர் ரேப்புஜி படத்தின் மூலம் தான் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து 2004ஆம் வெளிவந்த தூம் மற்றும் யுவா படங்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு அபிஷேக் பட்சன் தற்போது “Manmarzian ” என்ற புதிய படத்தில் நடித்து இருந்தார். அவருக்கு ஜோடியாக டாப்ஸி பண்ணு நடித்து இருந்தார்.
https://twitter.com/juniorbachchan/status/1325732912273125376
இந்த படத்தை “இமைக்கா நொடிகள் “படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனுரங் கஷ்யப்ப தான் இயக்கி உள்ளார். கடந்த ஆண்டு இந்த படம் வெளியானது.நடிகர் அபிஷேக் பட்சன் அவர்கள் 2007 ஆண்டு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அவர்களை திருமணம் செய்து கொண்டார். 1994 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற ஐஸ்வர்யா ராய். தமிழ்,தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து உள்ளார். திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா ராய் அவர்கள் படங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா ராய் ஒரு குழந்தைக்கு தாயாக இருந்தாலும் இன்னமும் அழகு தேவதையாகவே வலம் வந்து கொண்டு தான் இருக்கிறார். என்னதான் பாலிவுட் சூப்பர் ஸ்டார் மகனாக இருந்தாலும் அபிஷேக் பச்சன் நடித்த பல படங்கள் தோல்வி படமாக அமைந்திருக்கிறது. அதேபோல பாலிவுட்டில் இவருக்கென்று ஒரு இடத்தை இவரால் பிடிக்க முடியவில்லை. மேலும் இவர் திருமணம் செய்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பாக சல்மான்கான் விவேக் ஓபராய் போன்ற பலருடன் காதலில் இருந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/kiranbanwait11/status/1326411725667753985
இந்த காரணங்களால் அபிஷேக் பச்சன் அடிக்கடி கேலி கிண்டலுக்கு உள்ளாவதால் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் வாசி ஒருவர் நடிகர் அபிஷேக் பச்சனை கேலி செய்யும் விதமாக அபிஷேக் பச்சன் போலவே இருக்கும் நபரின் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அபிஷேக் பச்சன் குடும்பத்தில் இல்லாமல் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என்று சூசகமாக தெரிவித்திருந்தார். இந்த பதிவை கண்டு சற்றும் கோபப்படாமல் நடிகர் அபிஷேக் பச்சன், வேடிக்கையாக இருக்கிறது ஆனால் தற்போதும் நான் உங்களை விட அழகாக இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.





