சீரியல் நடிகை அகிலா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அகிலா. இவர் 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். இவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு சீரியலில் நடிக்க அறிமுகமானார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கோலங்கள் என்ற சீரியல் மூலம் தான் அகிலா இல்லத்தரசிகளின் மத்தியில் அறிமுகமானார். இந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் ரோஜா கூட்டம், சிவசக்தி, திருமதிசெல்வம், இளவரசி, உதிரிப்பூக்கள் போன்ற பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்திலும் மிரட்டி இருக்கிறார்.
அகிலா நடித்த சீரியல், படங்கள்:
மேலும், இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் சரவணன், மனதோடு மழைக்காலம், கண்ணும் கண்ணும், பொல்லாதவன், அரசாங்கம், திருவண்ணாமலை போன்ற பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இதற்கிடையில் இவர் சீசன்ஸ் ஈவன்ட்ஸ் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார். அதன் பின் கடைசியாக இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அபியும் நானும் என்ற தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டிருந்தார்.
https://www.youtube.com/shorts/Zjz3QmyjJW4
அகிலா கர்ப்பம்:
2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த அபியும் நானும் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த தொடரில் கிரிஜா சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் அகிலா நடித்தார். அதற்குப்பின் இவர் பெரிதாக எந்த சீரியலும் நடிக்கவில்லை. சமீபத்தில் இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி இணையத்தில் வைரலாகி இருந்தது. பலருமே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். அதோடு இவருடைய வளைகாப்பு புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகி இருந்தது.
https://www.youtube.com/watch?v=jvTb93OwkA8
அகிலா பேட்டி:
இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை அகிலா, நான் 22 வயதில் இருந்தே தொகுப்பாளனி, சீரியல் என்று பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் சீக்கிரமாகவே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே கடவுளும் எனக்கு வரத்தை கொடுத்து விட்டார்.
நான் கர்ப்பம் ஆகுவதற்குள்ளே நான் கமிட்டாகி இருந்த அனைத்து சீரியல்களை முடித்துவிட்டேன். இப்போது என்னுடைய கர்ப்ப காலத்தை ஜாலியாக அனுபவித்து வருகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விட என்னுடைய நண்பர்கள் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்கள். கர்ப்பமாக இருந்தால் ஒருவருக்கு ஒரு முறை தான் வளைகாப்பு நடக்கும். ஆனால், எனக்கு தினம் தினம் வளைகாப்பு தான்.

சீரியல் அனுபவம்:
இப்போது எனக்கு 27 வயதில் ஒரு பெண் இருக்கிறாள். அவள் பெயர் அஸ்வதி. மலர் சீரியலில் ஹீரோயினி அவள் தான். அவளும் என்னுடைய நண்பர்களும் சேர்ந்து தான் எனக்கு வளைகாப்பு செய்தார்கள். மேலும், சீரியல் என்பது சுட சுட தோசை மாதிரி இருக்கும். ஆனால், வெப் தொடர் அப்படி கிடையாது. எந்த மாதிரி நடிக்கப் போகிறோம் என்பது முன்கூட்டியே தெரிந்துவிடும். இதனால் எந்தவித பரபரப்பும் இல்லாமல் ஜாலியாக அமைதியாக நடித்துக் கொடுக்கலாம். சீரியலில் நடிப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். காரணம், ஹீரோ ஹீரோயினி வில்லி என மூன்று கதாபாத்திரத்தில் தான் கதை நகரும். நான் இதுவரைக்கும் 40-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறேன். இதற்கெல்லாம் எனக்கு துணையாக இருந்தவர் என்னுடைய கணவர் தான். இதுவரை என்னுடைய கணவர், குடும்பத்தை பற்றி நான் பெரிதாக மீடியாவில் காண்பித்தது இல்லை. என்னுடைய குடும்பம் எனக்கு ரொம்ப பொக்கிஷம் மாதிரி என்று கூறியிருக்கிறார்.






