சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவி தொடர்கள் என்றால் மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உண்டு. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் அபியும் நானும். மகளை கண்டுபிடிக்கும் ஒரு அம்மாவின் தேடுதலுக்கான கதை தான் அபியும் நானும். இந்த சீரியலை சன் என்டர்டைன்மென்ட் மற்றும் விஷன் டைம் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்து தயாரித்து வருகிறது. மேலும், இந்த தொடரில் ரியா மனோஜ், வித்யா மோகன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அபியும் நானும் சீரியல் தற்போது இல்லத்தரசிகளை மட்டுமல்லாது குட்டிகஸ்ளையும் கவர்ந்து இருக்கிறது. இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் அபி மற்றும் நிதிஷ் என்ற இரண்டு சிறுவர்கள் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் அபியும் நானும் சீரியல் புகழ் நித்திஷ் கின்னஸ் சாதனை செய்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. கின்னஸ் சாதனை செய்ய வேண்டும் என பலரும் முயற்சி செய்வார்கள். ஆனால், ஒரு சிலருக்கே வெற்றி கிடைக்கும். அந்த வகையில் அபியும் நானும் சீரியலில் முகில் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நித்திஷ் கின்னஸ் சாதனை செய்திருக்கிறார்.
நிதிஷ் செய்த சாதனை:
அவர் 60 நொடிகளில் 60 கார்ட்டூன் பெயர்களைக் கூறி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது அவருக்கு 7 வயது தான் ஆகிறது. இந்த சிறு வயதிலேயே இவ்வளவு பெரிய சாதனை செய்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்து பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும், இது குறித்து நித்திஷ் இடம் பேட்டி எடுக்கப்பட்ட போது அவர் கூறியிருப்பது, கார்ட்டுன் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
சாதனை செய்த நிதிஷ் அளித்த பேட்டி:
அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் என் மனதில் பதிந்துவிட்டது. சாதனை செய்தால் தான் நன்றாக பெரிய ஆளாக முடியும். அதனால் தான் என்னால் எளிதாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தது என்று கூறியிருந்தார். இப்படி நிதிஷ் கூறியிருக்கும் பேட்டியும், கின்னஸ் சாதனை செய்த புகைப்படமும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இது குறித்து அபியும் நானும் சீரியலில் நடிக்கும் நடிகர் ராஜ் கமல் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு நிதிஷை ரொம்ப ரொம்ப பிடிக்கும். இவரை முட்ட கண்ணன் என்றுதான் செல்லமாக அழைப்போம்.
நிதிஷ் செய்த சாதனை:
சீரியலில் சூப்பராக நடிக்கிறார். ஒரு தந்தை நிலையில் குழந்தைகளுக்கு சொல்ல வருவது என்னவென்றால், கல்லூரி, இன்ஜினியரிங் படிப்பதெல்லாம் ஒரு எக்ஸ்ட்ரா கோர்ஸ். எல்லா பெற்றோர்களும் கின்னர்ஸ் எல்லாம் முக்கியமா? முதலில் படி அதற்கப்புறம் கின்னஸ் சாதனை பார்க்கலாம் என்று சொல்வார்கள். ஆனால், தயவு செய்து குழந்தைகளை சாதிக்க விடுங்கள். இவன் ஒரு நூறு முகத்தை மனதில் பதிய வைத்து தான் சாதனை செய்திருக்கிறார்.
பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது:
இதுதான் நம் பள்ளியிலும் கல்லூரியிலும் செய்ய முடியும். இந்த வயதில் நம்மால் இவ்வளவு ஞாபகம் வைத்துக்கொள்ள முடியும் என்றால் அவன் பள்ளியில் கல்லூரியில் படிக்கும் போது பல விஷயங்களை ஞாபகம் கொண்டு சாதிக்க முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு சாதிக்க நினைக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் உறுதுணையாக இருங்கள் என்று கூறி இருக்கிறார். இப்படி ராஜ்கமல் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.