உயிர் போகும் நிலையிலும் இந்த இந்திய ஆவணங்களை காத்த அபிநந்தன்.! வெளியான புகைப்படம்.!

0
1095
Abi
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 14 ஆம் தேதி புல்வாமா நடத்திய தாக்குதலுக்கு தற்போது இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.

-விளம்பரம்-
abhinandan
abhinandan

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஸ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பால்கோட் என்ற பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.

- Advertisement -

இந்த தாக்குதலை அடுத்து இந்திய எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தானின் f16 ரக விமானம் தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளது. ஆனால், அந்த விமானம் இந்திய ராணுவத்தால் சுட்டு வீழ்ந்தப்பட்டது. இந்த தாக்குதலின் போது பாகிஸ்தான் எல்லையில் நுழைந்த இந்தியாவின் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பிடிபட்ட 2 விமானிகளில் ஒருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தெரிவித்திருந்த நிலையில் அபிநந்தன் என்ற இந்திய வீரர் பாகிஸ்தான் சிறைபிடித்து வைத்துள்ளது.

அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியதும் அவரை ராணுவமும், பொதுமக்களும் சேர்ந்து தாக்கினர். பின்பு அவர் பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது. இதனிடையே பாகிஸ்தான் நாட்டின் இதழான ‘டான்’ என்ற பத்திரிகையில் அபிநந்தன் சிக்கியது எப்படி என்று கட்டுரையை வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

அதில், பாகிஸ்தான் எல்லையில் விழுந்த அபிநந்தன், இது இந்தியாவா பாகிஸ்தானு என்று தன்னை சுற்றி இறைந்தவர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இந்தியா என்று கூறியுள்ளனர். பின்னர் உடனே இந்தியாவை ஆதரித்து கோஷமிட்டார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞ்சர்கள் அவரை கற்களை கொண்டு அடித்துள்ளனர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது கையில் இருந்த பிஸ்டனை வைத்து வானில் நோக்கி சுட்டபடியே ஓடியுள்ளார் அபிநந்தன். அப்போது அவரது காலில் ஒருவர் சுட்டுள்ளார் இதனால் அருகில் இருந்த குளத்தில் குதித்துள்ளார். பின்னர் அவரிடம் இருந்த ஆவணங்களையும், வரைபடத்தையும் யாருக்கும் கிடைக்காத வண்ணம் அளித்துள்ளார் அபிநந்தன். பின்னர் அவர்களை அங்கிருந்த இளைஞர்கள் தாக்க,அங்கு விரைந்து வந்த பாக்கிஸ்தான் ராணுவ அதிகரிகள் அவரை பத்திரமாக மீட்டு கைது செய்த்தனர்’ இவ்வாறு அந்த நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement