சற்று முன் : சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்ட பாகிஸ்தான் பிரதமர்.!

0
831
Imran-Khan
- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் செய்தி இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பற்றித்தான். பாகிஸ்தான் நடத்திய புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த முகாம்களை அழித்தது.

-விளம்பரம்-
Abinandan

இதற்கு எதிர்த்தாக்குதல் அளிக்கும் வகையில் நேற்று காலை பாகிஸ்தான் போர் விமானங்கள் சில இந்திய எல்லைக்குள் ஊடுருவ பார்த்தது. அதனை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுத் தள்ளினர். இந்த தாக்குதலின்போது எதிர்பாராதவிதமாக இந்திய ராணுவ வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார்.

- Advertisement -

அவரை தற்போது பாகிஸ்தான் அரசு சிறை பிடித்து வைத்துள்ளது அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று இந்தியா சார்பில் கடும் கண்டனம் எழுந்தது இந்த நிலையில் அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்போவதாக பாகிஸ்தானின் பிரதமர் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நலமுடன் உள்ளார்; ஒரிரு நாளில் விடுதலை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் அவரை நாளை விடுதலை செய்யப்போவதாக சற்று முன்னர் கூறியுள்ளார். போர் பதட்டம் நிலவி வரும் வேளையில் அமைதி திரும்பவும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அபிநந்தன் விடுவிப்பதாக இம்ரான் கான் கூறியுள்ளார். இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement