கடந்த மாதம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர் கள்ளக் காதலருடன் வாழ்வதற்காக இரண்டு பிள்ளைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
கொலை குற்றத்திற்காக அபிராமி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரியாணி கடை ஊழியர் சுந்தரம் என்பவரும் புழல் சிறையில் அடைக்கபட்டனர். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக புழல் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருந்த இருவரையும் நீதி மன்ற விசாரணைக்காக ஸ்ரீபெரும்புதுார் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட்,சிவசுப்பிரமணியம் முன் ஆஜர்படுத்தினர்.
நேற்று(அக்டோபர் 8) நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் இருவரின் நீதிமன்ற காவலை, அக்டோபர் 12 வரை நீட்டித்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அதன் பின்னர் அபிராமி மற்றும் சுந்தரம் இருவரும் ஒரே வேனில் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.
நீதி மன்றத்திற்கு வேனில் ஒன்றாக வந்து சென்ற போதும் இருவரும் ஒருவார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லையாம். அத்தோடு நீதிமன்றத்திற்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும், அபிராமி தன் முகத்தை கருப்பு துப்பட்டாவால் மூடியிருந்தார்.
மீண்டும் சிறைக்கு செல்வதற்கு முன்பாக வேனில் அபிராமி அமர்ந்திருந்த போது, கண் கலங்கிய படி, சோர்வாக இருந்தார். உண்மையில் தனது பிள்ளைகளை கொன்றுவிட்டோமே என்று சோகத்தில் இருந்தார,இல்லை சுந்தரத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று துக்கத்தில் அழுதாறா என்பது kundஅபிராமிக்கே வெளிச்சம்.