இளைய தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.பொதுவாக விஜய் படங்கள் என்றாலே அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும். அதிலும் முருகதாஸ், ஏ ஆர் ரகுமான் , சன் பிக்சர்ஸ் என்று பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு எதிர்பபு மிக அதிகமாகவே உள்ளது.இந்நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறித்து அபிராமி திரையரங்கின் உரிமையாளர் அபிராமி ராமனாதன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள பிரபல திரையரங்கனா அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமனாதன் விஜயின் பல்வேறு படங்களுக்கு திரையரங்க விநியோகிஸ்தராக இருந்துள்ளார். அதே போல நடிகர் விஜய்யும் தன்னுடைய படம் ஓடும் போது இவரை தொடர்பு கொண்டு ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் எப்படி உள்ளது என்று கேட்டுக்கொள்ள கூடிய அளவிற்கு விஜய்க்கும் மிகவும் நெருக்கமானவர் அபிராமி ராமனாதன்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிராமி ராமனாதனிடம் சர்கார் படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.அப்போது சர்கார் படம் எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அபிராமி ராமனாதன், சர்கார் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது. எப்போது புக்கிங் ஆரம்பிப்பீர்கள் என்று பலரும் கேட்டு வருகின்றனர்.
நாங்கள் பொதுவாக பகலில் தான் புக்கிங் ஆரம்பிப்போம் ஆனால், இந்த படத்தின் புக்கிங்கை இரவில் ஆரம்பித்தாள் கூட 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடும். இந்த படத்தை மட்டும் எங்கள் அபிராமி திரையரங்கு சார்பாக 55 திரைகளில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளோம். தீபாவளிக்கு சல்மான் கானின் ‘தக்ஸ் ஆப் இந்துஸ்தான் ‘ வெளியாக இருக்கிறது. அந்த படம் இந்தியில் வேண்டுமானால் முதல் இடத்தை பிடிக்கலாம் இங்கு சர்க்கார் தான் முதல் இடத்தில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.