விவாகரத்து ஆனா அடுத்தவங்கபுருஷனுக்கு ஆசைப்படுவோமா?- நடிகை காயத்ரி ரகுராம் ஆதங்கம்

0
153
- Advertisement -

விவாகரத்து ஆன பெண்கள் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து காயத்திரி ரகுராம் பேசியிருக்கும் விஷயங்கள்தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரகுராம். இவர் பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டரின் மகள் ஆவார். காயத்ரி ரகுராம் அவர்கள் நடிகை மட்டும் இல்லாமல் நடன இயக்குனரும் ஆவார். இவர் பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

மேலும், காயத்திரி ரகுராம் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடா மொழிகளிலும் ஒரு சில படங்கள் நடித்து இருக்கிறார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. அதற்குப் பின் தான் இவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இருந்தாலும், இவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்குப் பின் தான் இவர் அரசியலில் குதித்தார். முதலில் காயத்ரி BJP கட்சியில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் தமிழ்நாட்டு மற்றும் அயல்நாட்டு தமிழ் வளர்ச்சித் துறையில் தலைவராக இருந்தார். இவர் பாஜக கட்சியில் சேர்ந்ததிலிருந்து பல்வேறு பிரச்சினைகளில் சிக்கியிருந்தார்.

- Advertisement -

காயத்திரி ரகுராம் குறித்து :

குறிப்பாக, காயத்ரி ரகுராம் ஒவ்வொரு முறை உயர்பதவி பெரும் போதும், இவரது பெயர் அடிபட்டு விமர்சிக்கப்பட்டது. அதோடு கட்சியில் உள்ள மற்ற கட்சியினரின் உளவாளி என்பவர்களில் இவரது பெயர் பலமுறை அடிபட்டு வந்தது. இதனால் இவரை பாஜகவில் இருந்த பதவியில் இருந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நீக்கம் செய்தார். இதனால் அண்ணாமலையின் ஆதரவாளர்களுக்கும், காயத்திரி ரகுராமுக்கும் இடையே சில சர்ச்சைகள் ஏற்பட்டது. பின் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினார். சமீபத்தில் தான் இவர் அதிமுக கட்சியில் இணைந்திருக்கிறார்.

காயத்திரி ரகுராம் பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இவர் விவாகரத்தான பெண்களின் நிலை குறித்து பேட்டியளித்துள்ளார். அதில், விவாகரத்து செய்த பெண் என்றாலே அவருக்கு சமூகத்தில் பெரிய பாதுகாப்பு இருக்காது. அதுதான் உண்மை என்று நான் சொல்வேன். ஒன்று அவர்கள் அணுகுவதற்கு எளிமையாக இருப்பார்கள் என்று நினைப்பார்கள். இல்லை என்றால் நாம் ஈசியாக அவர்களை தாக்கி விடலாம் என்று நினைப்பார்கள். மேலும், அந்தப் பெண்ணை அவதூறாக சில பேர் பேசி வருவார்கள்.

-விளம்பரம்-

எனக்கு அப்பா கூட இல்லை:

ஒரு பெண் விவாகரத்து செய்துவிட்டு வந்தால் அந்தப் பெண்ணை அவள் நண்பர்களே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். இன்னும் சில பெண்கள், தன்னுடைய கணவரை அந்த மாதிரியான பெண்களோடு பழக விட மாட்டார்கள். எனக்கு அப்பா கூட கிடையாது. ஆகையால், என்னை நான்தான் ஒரு பெண்ணாக இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆணாக இருந்தும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் உங்க கேரக்டரை அவதூறாக பேசினால், வருத்தப்படாதீர்கள். அவர்களின் பார்வை தவறாக இருந்தால் அது அவர்களின் பிரச்சனை.

இரண்டாம் திருமணம் குறித்து:

மேலும், ஒரு முறை நமக்கு துணை வேண்டும் என்று தோன்றும், மறுமுறை துணை வேண்டுமா என்று தோன்றும். இப்பதான் இவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம். மீண்டும் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டுமா? என்று நினைப்பு வரும். இரண்டாவது திருமணம் எல்லாம் சில பேருக்கு மட்டும் தான் அமையும். சில பேருக்கு அமையாது. அதனால் அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவங்களை நான் செல்ஃப் கிங் என்றுதான் சொல்லுவேன். எனக்கு இனி கல்யாணமே வேண்டாம் நான் ஆறுதல் தேடுவதற்கு கடவுள் இருக்கிறார் என்று பேசியுள்ளார்.

Advertisement