தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு கங்குவா படம் குறித்து சோசியல் மீடியாவில் பயங்கரமான நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. காரணமே இல்லாமல் சூர்யாவையும், படத்தையுமே மோசமாக விமர்சித்தும் திட்டி இருக்கிறார்கள்.
கங்குவா படம்:
மேலும், கங்குவா படம் மட்டும் இல்லாமல் இதற்கு முன்பே சில படங்களுக்கு மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் வந்திருக்கிறது. இதற்கு காரணம், தமிழகத்தில் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் ஆரம்பம் ஆகிறது. ஆனால், அதற்கு முன்பு மற்ற மாநிலங்களில் படம் வெளியாகுவதால் அதை பார்த்துவிட்டு youtubeல் விமர்சனங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை:
இது குறித்து தொடர்ந்து சோசியல் மீடியாவில் பேசப்பட்டு தான் வருகிறது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என பலருமே தங்களுடைய மன குமரல்களை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட இது தொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் திருப்பூர் சுப்ரமணியன் கோரிக்கை வைத்து இருந்தார். இந்த நிலையில் இந்த விஷயம் தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருக்கிறது.

அறிக்கையில் சொன்னது:
அதில் அவர்கள், இந்த 2024 வருடத்தில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா திரைப்படங்களுக்கு Public Review மற்றும் Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channel-கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channel-களும் எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review மற்றும் Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம் என்று கூறி இருக்கிறார்.

படத்தின் கதை:
படத்தில் 1070 மற்றும் 2024 என்று வெவ்வேறு காலகட்டத்தில் கதை நகர்கிறது. இரண்டு காலகட்டத்தையுமே மாற்றி மாற்றி காட்டுகிறார்கள். தற்போது இருக்கும் காலகட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு ஜூடா என்பவருடைய மூலம் தான் யார் என்பது தெரிய வருகிறது. அங்கிருந்து கங்குவா கதை தொடங்குகிறது. அதில் பெருமாச்சி தீவின் நாயகனாக வலம் வருபவர் கங்குவா. கங்குவாவுக்கும் அவருடைய குழுவுக்கும் போர் செய்வது தான் குலத்தொழில். வீரமும் இயற்கை விளைந்த அந்த மண்ணை தன்னுடைய வசம் படுத்த ரோமானிய அரசு நினைக்கிறது. அதற்கு பிறகு என்ன ஆனது? உதிரா பெருமாச்சி மீது போர் தொடுக்க காரணம் என்ன? கங்குவாவை கொள்ள துடிக்கும் கொடுவாவின் பகை என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை.






