தமிழ் சினிமாவில் நடிக்காத காரணம் பற்றி நடிகர் ஆதி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ஆதி. இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஈரம், மரகதநாணயம், யாகவராயினும் நாகாக்க போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

இருந்தாலும், சமீப காலமாக இவர் அதிகம் தமிழில் நடிப்பது இல்லை. அதோடு இவர் தெலுங்கு மொழியில் தான் நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் பாட்னர். இந்த படத்தை
இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி,பாலக் லால்வாணி, யோகிபாபு, பாண்டியராஜன், ரவி மரியா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.
ஆதி குறித்த தகவல்:
தற்போது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்திருக்கும் படம் சப்தம். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியாகிய ஈரம் படத்தின் மூலம் தான் அறிவழகன் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாக இருந்தார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து சப்தம் படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தில் ஆதி, பேய்களைப் பற்றி தெரிந்து கொள்ளும் புலனாய்வாளராக நடித்திருக்கிறார்.

சப்தம் படம்:
இந்த படத்தில் சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், ரெடிங் கிங்ஸ்லி, எம் எஸ் பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். 7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ் திகில் பாணியில் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் வருகிற 28ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

பட விழாவில் ஆதி:
இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆதி, பலருமே ஏன் தமிழில் நடிப்பதில்லை? தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால், எனக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. குறைவாக தான் கிடைக்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை. எனக்கு கால் வலிக்கவில்லை. தொடர்ந்து இந்த களத்தில் நான் ஓடிக்கொண்டு தான் இருக்கிறேன். நான் தெலுங்கு படம் பண்ணினாலும் இங்கே தான் இருக்கிறேன்.
ஷூட்டிங் நேரத்தில் மட்டும்தான் நான் அங்கு போவேன். மற்றபடி நான் இங்கு தான் இருக்கிறேன்.

தமிழ் சினிமா பற்றி சொன்னது:
நான் இதுவரைக்கும் அதிகமாக அறிமுகம் இயக்குனர்களோடு தான் படம் பண்ணி இருக்கிறேன். இந்தப் படத்தின் இயக்குனர் அறிவழகன் சாரோட முதல் படம் தான் ஈரம். நீண்ட இடைவெளிக்கு பிறகு அறிவழகன் சாருடன் நான் இந்த படத்தில் நடித்திருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த படம் கமிட் ஆனதும் நண்பர்களிடம் பேசும்போது, ஹார்டர் படமா? ஏன்? என்றெல்லாம் கேட்டார்கள். ஹாரர் படம் என்றாலே குறைவாக பார்க்கிற பார்வை தான் இங்கு இருக்கிறது. இயக்குனர் அறிவழகன் உடைய கதையில் நேர்மை, சுவாரஸ்யம் எல்லாம் இருக்கிறது. சில படங்களை பார்க்கும் போது ஹாலிவுட் படம் மாதிரி இருக்கும் என்று சொல்வார்கள். நம்ம ஊரிலும் அதைவிட இன்னும் நன்றாக பண்ண முடியும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் நிரூபித்து இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.






