90ஸின் சாக்லேட் பாய் அப்பாஸுக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்காரா. புகைப்படங்கள் இதோ.

0
4003
abbas
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். நடிகர் அப்பாஸ் 1975 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் மிர்ஸா அப்பாஸ் அலி. தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தான் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் 1996 ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழில் அறிமுகம் ஆனார். இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-


அதன் பின்னர் இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். இவர் தமிழில் கடைசியாக ராமானுஜம் என்ற படத்தில் நடித்தார். பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் டிவி சீரியல்களிலும் நடித்தார். பிறகு இவர் எராம் அலி என்னும் பேஷன் டிசைனரை கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு பிள்ளைகள் உள்ளார்கள்.

- Advertisement -

தற்போது இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அப்பாஸின் மகளின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இவருடைய மகள் எமிராவுக்கு 21 வயது ஆகிறது.

அப்பாஸின் மகளின் எமிரா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் வாவ் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள். அப்பாசுவிற்கு இவ்வளவு பெரிய மகளா என்றும் சிலர் கேட்டு வருகிறார்கள்.
தற்போது அய்மான் சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement