தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல நடிகர்கள் இருந்துள்ளனர். பிரசாந்த் துவங்கி மாதவன் வரை பல்வேறு நடிகர்கள் சாக்லேட் பாய் என்ற அந்தஸ்துடன் இருந்தவர்கள் தான். அந்த வகையில் நடிகர் அப்பாஸும் ஒருவர். தமிழ் சினிமாவில் வெள்ளை ஹீரோக்கள் அறிமுகமான காலத்தில் பல பெண்கள் மத்தியில் கனவுக் கண்ணனாக வளம் வந்தவர் நடிகர் அப்பாஸ். 1996ஆம் ஆண்டு ‘காதல் தேசம்’என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்து.சிறு வயதில் இருந்தே ஹிந்தி மற்றும் பெங்காலி படங்களை பார்த்து வளர்ந்துள்ளார் அப்பாஸ். தனது கல்லூரி காலங்களில் இருந்தே மாடலிங் செய்து வந்தார் அப்பாஸ். அப்போது தான் இயக்குனர் கதிர் தனது கதைக்காக புதுமுக நடிகரை தேடி வந்தார்.
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் மற்றும் அஜித்துக்கு போட்டியாக இவர் வருவார் என பலர் கனவு கண்டார்கள். அதன்பின்னர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், என பல மொழிகளில் கிட்டத்தட்ட 100 படங்களில் நடித்தார் அப்பாஸ்.இவருக்கும் எராம் அலி என்னும் பேஷன் டிசைனருக்கும் கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் ஆனது. இந்த தம்பதிக்கு எமிரா, அய்மான் என இரண்டு குழந்தைகள் உள்ளது. திருமணத்திற்கு பின்னரும் சினிமா, டீவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார்.
இதையும் பாருங்க : 10 மாதத்திற்கு முன்பே சூர்யா படத்தில் நடிக்கப் போவது குறித்து சொல்லியுள்ள ரம்யா – ஆதாரம் இதோ.
இறுதியாக இவர் 2011 ஆம் ஆண்டு ‘கோ’ படத்தில் ஒரு பாடலில் மட்டும் தோன்றி இருந்தார். அதன் பின்னர் இவரை எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அப்பாஸ் சினிமாவில் இருந்து விலகியது குறித்தும், இந்தியாவை விட்டு வந்தது குறித்தும் கூறியுள்ளார். அதில், இந்தியா போன்ற ஒரு நாட்டில், ஒரு சினிமா கலைஞருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றால், அதன் பின்னணியில் உள்ள காரணத்தை அவர்கள் காணவில்லை. ஆனால் நியூசிலாந்தில், அப்படியான விஷயங்கள் கிடையாது. . நியூசிலாந்திற்கு வந்த பிறகு நான் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை செய்தேன், நான் ஒரு மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காக வேலை செய்தேன், அதை நான் ரசித்தேன். கட்டுமானத் துறையிலும் பணியாற்றினேன்.
அதற்கிடையில், நான் ஆஸ்திரேலியா சென்று ஒரு பொது பேச்சாளராக சான்றிதழ் பெற்றேன். தற்கொலை எண்ணம் கொண்ட இளைஞர்களிடம் தான் நான் உரையாடுவேன். நானே தற்கொலை எண்ணங்கள் கொண்டிருந்தேன். நான் என் வாழ்க்கையை மாற்றினேன். எனவே அவர்களும் அதைச் செய்ய முடியும் என்பதை அவர்களுக்குக் காட்ட விரும்புகிறேன். ஒரு நபரையாவது என்னால் காப்பாற்ற முடிந்தால், இந்த ஆண்டுகள் நான் நடித்த படங்களை விட அர்த்தமுள்ளதாகவும், நோக்கமாகவும் இருக்கலாம் என்று நினைத்தேன். நான் நியூசிலாந்தைத் தேர்ந்தெடுத்தேன், ஏனென்றால் என் வேலையைச் செய்வதிலும், நான் என்ன செய்ய விரும்புகிறேனோ அதைப் பெறுவதிலும் அதிக சுதந்திரத்துடன் வாழ இது அனுமதிக்கும். இந்தியாவில், நாம் இன்னும் ஒரு பொருள்முதல்வாத உலகில் சிக்கி இருக்கிறோம். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதில் நாம் எப்போதும் அக்கறை கொண்டுள்ளோம். ஒரு நடிகர் என்ன கார் பயன்படுத்துகிறார், என்ன ஆடை உடுத்துகிறார் என்று இங்கே பார்க்கமாற்றார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு என் வாழ்க்கையை எளிமைப்படுத்த விரும்புகிறேன். என் குழந்தை பருவத்தில், இந்தியா மிகவும் எளிமையாகவும் அழகாகவும் இருந்தது. மக்களாகிய நாம் அதை சிக்கலாக்கியுள்ளோம். எனக்கும் எனது குடும்பத்துக்கும் எனது வாழ்க்கையை எளிமைப்படுத்தவும், அடிப்படை வேர் ஒரு முறைக்குச் செல்லவும் இங்கு வந்தேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.