10 மாதத்திற்கு முன்பே சூர்யா படத்தில் நடிக்கப் போவது குறித்து சொல்லியுள்ள ரம்யா – ஆதாரம் இதோ.

0
1683
ramya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் நிறைவடைந்த பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள் அந்த வகையில் இளம் நடிகையான ரம்யா பாண்டியன் ஒருவர். நடிகை ரம்யா பாண்டியன் முதன் முதலில் சினிமா திரை உலகில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த ‘டம்மி டப்பாசு’ படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.மேலும், ராஜி முருகன் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் ஜோக்கர் திரைப்படம். இது சமூக பிரச்சனைகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். இந்த ஜோக்கர் படத்தில் ரம்யா பாண்டியன் அவர்கள் கிராமத்து பெண்ணாக வலம் வந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் நடிகை ரம்யா பாண்டியன் தன்னுடைய நடிப்புத் திறனால் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் இழுத்தவர்.

-விளம்பரம்-

அதற்குப் பின்னர் தான் சமுத்திரகனிக்கு ஜோடியாக “ஆண்தேவதை” என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை என்றாலும் அதற்கு பிறகு அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இடையில் இவர் நடத்திய போட்டோ ஷூட் மூலம் இளசுகள் மத்தியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி ஒரு நிலையில் தான் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெறும் வாய்ப்பும் கிடைத்தது. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டி வரை வந்த ரம்யா பாண்டியனுக்கு நான்காம் இடம் தான் கிடைத்தது.இப்படி ஒரு நிலையில் ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகை ரம்யா பாண்டியன் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். தற்போது ரம்யா பாண்டியனுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் ரம்யா பாண்டியனுக்கு இந்த பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று நினைக்கின்றனர் ஆனால், இந்த படத்தை பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டு மார்ச் மாதமே ரம்யா பாண்டியன் கூறி இருக்கிறார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு இன்ஸ்ட்டாகிராமில் பதிலளித்துவந்த போது ஒரு ரசிகர் தற்போது கைவசம் இருக்கும் படங்கள் என்ன என்று கேட்க, ரம்யா பாண்டியன் “ஆம். கையில் இரண்டு படங்கள் இருக்கிறது. சூர்யாவின் 2D நிறுவனத்துடன் ஒரு படம்  மற்றும்  CV குமார் நிறுவனத்துடன் ஒரு படம் என இரண்டு படங்கள் இருக்கிறது” என்று கூறி இருந்தார். இதோ அதன் ஸ்க்ரீன் ஷாட்.

-விளம்பரம்-
Advertisement