“பூமராங்” படத்தில் ஒரு காட்சிக்காக தியாகம் செய்த அதர்வா..! வைரலாகும் புகைப்படம்..!

0
1362
- Advertisement -

தமிழ் சினிமாவின் இளம் நடிகருள் ஒருவரான அதர்வா சமீபத்தில் வெளியான “இமைக்கா நொடிகள் ” படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். தற்போது இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் “`பூமராங்” என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Atharvaa

- Advertisement -

தமிழில் “ஜெயம்கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை ” போன்ற படங்களை இயக்கிய கண்ணன் “`பூமராங்” படத்தை இயக்கி தயாரித்தும் வருகிறார். இந்த படத்தில் நடிகர் அதர்வா மூன்று தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், இந்துஜா, உபென் படேல் போன்றவர்கள் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்காக நடிகர் அதர்வா மோட்டிட்டையடித்துக்கொண்டு சில காட்சிகளில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படம் குறித்து பேசிய இயக்குனர் கண்ணன், நான் இந்த படத்தில் அதர்வாவிற்கு இருக்கும் மூன்று முக்கிய தோற்றத்தை பற்றி விளக்கியவுடன் அவர் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார். அதர்வாவை பற்றி பரதேசி படத்திலேயே தெரியும் அவர் எந்த அளவிற்கு அர்பணிப்பானவர் என்று.

-விளம்பரம்-
Atharvaa-1
Atharvaa-1

Master

இந்த படத்தில் ஒரு காட்சிக்காக நடிகர் அதர்வா மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது. இந்த காட்சிகளை கடைசி கட்ட படப்பிடிப்பில் படம் பிடிக்க முடிவு செய்தோம்,மொட்டையடித்துக்கொண்டால் குறைந்தது இரண்டு மாதம் அவர் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியாமல் போகலாம் என்று அறிந்தும் இந்த படத்திற்காக அவர் மொட்டையடித்துக்கொண்டார். இமைக்கா நொடிகள் போலவே இந்த படத்துக்காகவும் அவருக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என்று கூறியுள்ளார் இயக்குனர் கண்ணன்.

Advertisement