தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக பிரபல நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் அஜித்தின் நடிப்பில் 1999 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த படம் அமர்க்களம். இந்த படம் சரண் இயக்கத்தில் வெளியானது.

இந்த படத்தில் ஷாலினி, ரகுவரன், நாசர் உட்பட பலர் நடித்து இருந்தார்கள் . இப்படி இருக்கும் நிலையில் அஜித்குமார்-ஷாலினி திருமண நாளை முன்னிட்டு இந்த படத்தை 4k தொழில்நுட்பத்தில் வெளியிட்டு இருந்தார்கள். இது தொடர்பாக அஜித் பட இயக்குனர் சரண் பேட்டி அளித்திருந்தார். அதில் அஜித் ரசிகர் மன்றத்தை கலைத்தது தொடர்பாக அளித்த பேட்டியில் சரண், அஜித்தைப் பொறுத்தவரை அவருடைய ரசிகர்கள் வெறும் ரசிகர்களாக பார்க்காமல் அவர்களை ரொம்ப மதிக்கக் கூடியவர்.
அமர்க்களம் ரீ-ரிலீஸ்:
அமர்க்களம் படம் வெளியான அன்று இரவு 25000க்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டது. அந்தளவிற்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது. ரசிகர்கள் மன்றங்களுக்குள் தேவையற்ற பதவி சண்டைகளும் அரசியல் மோதல்களும் உருவாவதை அஜித் கவனித்தார். மற்ற பதவிகளுக்காக ரசிகர்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்வதும் சண்டை போட்டுக் கொள்வதும் அஜித்திற்கு பிடிக்கவில்லை.

சரண் பேட்டி:
ரொம்பவே வருத்தத்தை ஏற்படுத்தியது. இதில் அவருக்கு உடன்பாடில்லை என்று என்னிடமே பலமுறை சொல்லி இருக்கிறார். ரசிகர்கள் தங்களுடைய குடும்பம் வேலை எதிர்காலத்தை கவனிக்க வேண்டும் என்பதுதான் அஜித்தினுடைய விருப்பம். ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்குள் எந்த மோதலும் பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சொல்லித்தான் தன்னுடைய ரசிகர் மன்றத்தையே அஜித் கலைத்தார்.

ரசிகர் மன்றம் கலைத்த காரணம்:
அவர் எப்போதும், நீங்கள் உங்கள் வாழ்க்கையை பாருங்கள். என்னுடைய படம் பிடித்திருந்தால் வந்து பாருங்கள் என்று தான் சொல்லுவார். புகழுக்காகவும் மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும் அவர் பேசவே மாட்டார் என்று கூறி இருக்கிறார். கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தை நடித்து இருந்தார். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி இருந்தார்கள். இதை அடுத்து அஜித் அவர்கள் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார்.






