அஜித் நடித்து போஸ்டர் வெளியாகி பாதியிலேயே கைவிடப்பட்ட படங்கள் – நந்தா,கஜினி,ஜெமினி இன்னும் என்னென்ன படங்களோ.

0
1382
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் ரிலீசாகி இருந்தது. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார் மற்றும் போனிகபூர் தயாரித்து இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் இந்த படம் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு இரட்டை வேடம் என்று கூறப்படுகிறது. மலையாள நடிகை மஞ்சுவாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

அஜித் நடிக்கும் படங்கள்:

இதனை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக உள்ள தகவல் சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. தற்போது விக்னேஷ் சிவன்- அஜித் கூட்டணியில் படம் உருவாக இருப்பது ரசிகர் மத்தியில் பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்படம்பரில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாக இருந்து பின் பாதியிலேயே நிறுத்தப்பட்ட படங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

சாருமதி:

1997 ஆம் ஆண்டு இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. அஜித்தால் பாதி படப்பிடிப்பு திடீரென கைவிடப்பட்ட முதல் படம் இதுதான். ஆனால், அதற்கான காரணங்கள் என்னவென்று இதுவரை தெரியவில்லை. இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

நியூ:

2000ம் ஆண்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அஜித், ஜோதிகா இருவருமே இந்த படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பின் திடீரென்று விலகி விட்டார்கள். அதற்குப் பின் தான் எஸ் ஜே சூர்யா, சிம்ரன் நடித்து 2004-ல் படம் வெளியானது. படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

நந்தா:

1999 ஆம் ஆண்டு வெளிவந்த சேது வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாக இருந்த படம் தான் நந்தா. முதலில் இந்தப் படத்தில் அஜீத்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அஜித் விலக சூர்யா நடித்தார்.

இதிகாசம்:

சிட்டிசன் வெற்றியைத் தொடர்ந்து சரவண சுப்பையா உடன் மீண்டும் அஜித் இணைந்து நடிக்க இருந்த படம் இதிகாசம். இது வரலாற்றுப் பின்னணியில் படத்தின் பெயரின் பஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படம் முற்றிலும் கைவிடப்பட்டது.

ஏறுமுகம்:

இயக்குனர் சரண் உடன் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் நடித்த படம் ஏறுமுகம். இந்த படம் நாற்பது சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டது. ஆனால், கதையில் திருப்தி இல்லை என்று சொல்லி விட்டு அஜித் விலகி விட்டார். பின்னர் விக்ரம் நடிப்பில் ஜெமினி ஆக இந்த படம் வெளியாகி இருந்தது.

மகா:

போலீஸ் அதிகாரியாக திரில்லர் வகையான படம் மகா. இந்த படத்தின் படப்பிடிப்பு எட்டு நாட்கள் நடந்தது. அப்போது அவர் காலில் காயம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வர சில காலம் ஆனதால் படம் கைவிடப்பட்டது.

திருடா:

மருத்துவர் கதாபாத்திரத்தில் அஜீத் இந்த படத்தில் சில நாட்கள் நடித்தார். ஆனால், இந்த படம் கைவிடப்பட்டது. பின்னர் இதே கூட்டணியில் ஜனா திரைப்படத்தில் இணைந்து அஜித் நடித்திருந்தார்.

மிரட்டல்:

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்க இருந்த படம் மிரட்டல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது. ஆனால், மொட்டை அடிக்க வேண்டும் என்பதால் இதில் இருந்து அஜித் விலகி விட்டார். இந்த படம் கஜினியாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Advertisement