தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது அஜித் அவர்கள் கார் ரேசிங்கிலும், தன்னுடைய அடுத்த படத்திற்கான வேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித், கூட்ட நெரிசலால் தமிழகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. அந்த கூட்ட நெரிசலுக்கு அந்த தனி நபர் மட்டும் பொறுப்பு கிடையாது.

நாம் அனைவருமே அதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. கூட்டத்தை கூட்டுவதில் நாம் இன்று ஆர்வம் காட்டி வருகிறோம். இதனை பெரிய விஷயமாக ஆக்குவதை நாம் முதலில் நிறுத்த வேண்டும். திரையரங்கில் மட்டுமே கூட்ட நெரிசல் வருவது ஏன்? சினிமா பிரபலங்கள் இருக்கும் இடங்களில் இந்த மாதிரியான விஷயங்கள் நிகழ்வது ஏன்? அது திரைத்துறையை பற்றி உலகத்திற்கு தவறான புரிதலை தருகிறது. நாங்கள் இதை விரும்பவில்லை.
விஜய் பற்றி சொன்னது:
மக்களுடைய அன்பு எங்களுக்கு தேவை. அதற்காக நாங்கள் கடினமாக உழைக்கிறோம். நாங்கள் குடும்பத்தை பிரிந்து தூக்கம் இல்லாமல் கடினமாக உழைப்பதும் அதற்காகத்தான். ஆனால், உங்களுடைய அன்பை காட்டுவதற்கு வேறு வழிகள் இருக்கின்றது. ஊடகங்களும் இந்த முதல் நாள் முதல் காட்சியை ஊக்குவிக்கக் கூடாது என்று கூறியிருந்தார். இப்படி அஜித் பேசி இருந்த கருத்து தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=XlsA75eFiQY
அஜித் பேட்டி:
இதற்கு சிலர், விஜய்க்கு ஆதரவாக அஜித் கூறியிருக்கிறார் என்றும், சிலர் விஜய்க்கு எதிராக அஜித் கருத்து தெரிவித்திருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அஜித், நான் பேட்டியில் சொன்ன விஷயம் இளைஞர்களுக்கு நல்ல செய்தியை கொண்டு போய் சேர்க்கும் என்று இருந்தேன். ஆனால், ஒரு சிலர் அவர்களுடைய அஜெண்டாவை கொண்டு சேர்க்க பயன்படுத்துகிறார்கள். எனக்கு அது தெரியும். இங்கு எது எடுத்தாலுமே பரபரப்பாக மாற்ற முயல்கிறார்கள்.

சர்ச்சைகளுக்கு விளக்கம்:
நான் எனக்கு பிடித்த பாதையில் பயணிக்க விரும்புகிறேன். என்னுடைய நல்ல எண்ணங்கள் சில ஊடகங்களால் இளைஞர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படவில்லை. விஜய்க்கும் அஜித்துக்கும் இடையே மோதல், அஜித் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே போர் என்றெல்லாம் சொல்கிறார்கள். நாம் விஷம் கலந்த சமூகமாக மாறிவிட்டோம். நான் பேசியதை விஜய்க்கு எதிராக கட்டமைக்க சிலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அமைதியாக இருப்பது நல்லது. எப்போதும் நான் விஜய்க்கு நல்லதையே நினைத்து வருபவன். நானும் விஜயும் எதிரி கிடையாது என்று கூறியிருக்கிறார்.






