தனக்கு இருக்கும் தூக்கம் ப்ரச்சனை பற்றி நடிகர் அஜித் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த படம் குட் பேட் அக்லி.

இந்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கி இருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் அஜித் உடைய தீவிர ரசிகர். குட் பேட் அக்லி படத்தை தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருந்தது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தை அஜித் ரசிகர்கள் தியேட்டரில் ஆடி பாடியும், பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் கொண்டாடி இருந்தார்கள்.
அஜித் குறித்த தகவல்:
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூலும் செய்து இருந்தது. இதை அடுத்து அஜித் அவர்கள் தன் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளை தொடர்ந்து தற்போது ஸ்பெயின் நாட்டில் கார் பந்தயம் நடைபெற்றிருக்கிறது. இதில் அஜித்குமார் ரேஸிங் அணியும் பங்கேற்று இருக்கிறது. நேற்று நடந்த இந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன் போட்டியில் அஜித்தின் அணி மூன்றாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறது.

அஜித் பேட்டி:
இதற்கு ரசிகர்கள் பலருமே வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் அஜித், சோசியல் மீடியாவை சரியாக பயன்படுத்தினால் அது ஒரு சிறந்த கருவியாக இருக்கும். நிறைய பேர் சோசியல் மீடியா வழியாகத்தான் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அதேபோல வெளிநாடுகளில் உள்ள மக்கள் இந்திய திரைப்படங்களையும் வெப்சீரிஸ்களையும் பார்க்க தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

தூக்கம் பிரச்சனை:
என்னுடைய சில நண்பர்கள் கொரியன் டிராமாக்களை பார்த்து அந்த மொழியை கற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், எனக்கு திரைப்படங்களையும் வெப்சீரிஸ்களையும் பார்க்க நேரம் எதுவும் கிடையாது. விமானத்தில் பயணிக்கும் போது மட்டுமே எனக்கு தூங்க நேரம் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் எனக்கு தூக்கம் பிரச்சனையும் இருக்கு. எனக்கு தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். அப்படியே தூங்கினாலும் அதிகபட்சம் 4 மணி நேரம் தான் தூங்குவேன் என்று கூறியிருக்கிறார்.






