நடிகர் அஜித் வாங்கிய புதிய போன்…!விலையை கேட்டால் அசந்து போவீர்கள்..!

0
1959
Actor-ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். நடிகர் அஜித்திற்கு கார், பைக் என்றால் எந்த அளவிற்கு பிரியம் என்பது அவரது ரசிகர்களுக்கு தெரியும். ஆனால், அவர் பயன்படுத்தும் போன் பற்றி பலருக்கும் தெரியாது. அந்த விடயத்தை பிரபல மியூசிகலி புகழ் திருச்சி ரமேஷ் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

Ajith-jio-phone

- Advertisement -

சமீப காலமாக வலைதளத்தில் விடீயோக்களின் மூலம் பிரபலமானவர்கள் பல பேர் உள்ளனர் அதில் ஒரு சிலருக்கு சினிமா வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் மியூசிகலியில் பல பெண்களுடன் விடீயோக்களை பதிவிட்டு சமூக வலைதள வாசிகள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் திருச்சி ரமேஷ்.

மியூசிகலி மூலம் பிரபலமான இவருக்கு அஜித் நடித்து வரும் “விஸ்வாசம் ” படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ரமேஷ்ஷிடம் அஜித் உங்களது மியூசிகலி விடீயோக்களை பார்த்துள்ளாரா என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலளித்த ரமேஷ், நான் அஜித்துடன் 40 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன், என்னுடைய விடீயோக்களை ரோபோ ஷங்கர் பார்த்துள்ளார். ஆனால், அஜித் பார்த்தது இல்லை.

-விளம்பரம்-

திருச்சி ரமேஷ்:

Tiruchiramesh

அவர் வெறும் 1500 மதிப்புள்ள ஒரு சின்ன ஜியோ செல்லை தான் பயன்படுத்துகிறார். அதே போல அவர் வாட்ஸ் அப், பேஸ்புக் எல்லாம் உபயோகிக்க மாட்டார். போன் வந்தால் பேசுவார் அவ்வளவு தான் என்று ரமேஷ் கூறியுள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் இத்தனை வசதியாக உள்ள அஜித் எவ்வளவு எளிமையானவர் என்று அவர் பயன்படுத்தும் போனில் இருந்தே மீண்டும் ஒரு முறை உறுதியாகியுள்ளது. நடிகர் அஜித் இதற்கு முன்னாள் நோக்கியா 1100 போனை தான் பயன்படுத்தி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement