சினிமாவை தாண்டி நடிகர்களில் அஜித்திற்கு மட்டுமே கிடைத்த மிகப்பெரிய பெருமை..! குஷியில் ரசிகர்கள்

0
209
ajithaction

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் பன்முக திறமைகள் கொண்ட ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார். நடிப்பையும் தாண்டி கார், பைக் போன்ற விடயங்களில் நடிகர் அஜித்திற்கு மிகவும் ஆர்வம் என்பது தெரியும். அது போக நடிகர் அஜித் டிரோன் போட்டியிலும் அசத்தி வருகிறார்.

thalaajith

நடிகர் அஜித் கடந்த மே மாதம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆளில்லா விமான சோதனை பைலட்டாகவும் அந்த அமைப்பின் அலோசகராகவும் நியமிக்கபட்டிருந்தார். மேலும், “தக்ஷா” என்ற டிரோன் குழுவிற்கு அஜித் அலோசகராகவும் இருந்து வருகிறார்.

இந்த “தக்ஷா” குழு பல்வேறு நாடுகளில் நடக்கும் டிரோன் போட்டிகளில் பங்குபெற்று வருகிறது. இந்த குழு சமீபத்தில் நடந்த டிரோன் போட்டியில் “தக்ஷா” என்ற ட்ரொனை 6 மணி நேரம் 7 நிமிடங்கள் தொடர்ந்து இயக்கி சாதனை படைத்தது.

இந்நிலையில் இம்மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்தில் ஆளில்லா விமானம் தொடர்பான டிரோன் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது .உலக அளவில் நடைபெறவிருக்கும் இந்த போட்டியில் 13 டிரோன் குழு பங்குபெறுகிறது. அதில் அஜித் ஆலசோகராக இருக்கும் “தக்ஷா” குழுவும் கலந்துகொள்ள இருக்கிறது.

ajith

இந்தப் போட்டியில், சோதனை கூடம் ஒன்றிலிருந்து நோயாளியின் ரத்த மாதிரியை எடுத்து மீண்டும் சோதனை கூடத்துக்கு ஆளில்லா விமானம் மூலம் கொண்டு வர வேண்டும். இந்த போட்டியில் பங்குபெற விரைவில் அஜித் மற்றும் “தக்ஷா” குழுவும் ஆஸ்திரேலிய செல்லவிருக்கிறது.